கிலோக்கணக்கில் நகைகள் மட்டுமல்ல.. மகளின் திருமணத்திற்கு நடிகை ராதா கொடுத்த மிகப்பெரிய சீதனம் என்ன தெரியுமா?

First Published | Nov 24, 2023, 11:04 AM IST

நடிகை ராதா தனது மகள் கார்த்திகாவின் திருமணத்திற்கு வழங்கிய சீதனம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Karthika Nair

1980களில் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த் நடிகைகளில் ராதா முக்கியமானவர். பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகமான ராதாவுக்கு தனது முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது.

அலைகள் ஓய்வதில்லை படம் மிகப்பெரிய ஹிட்டான நிலையில் ராதாவுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. தொடர்ந்து டிக் டிக் டிக், கோபுரங்கள் சாய்வதில்லை, எங்கேயோ கேட்ட குரல், அம்மன் கோயில் கிழக்காலே, ஜப்பானில் கல்யாணராமன், காதல் பரிசு, ராஜாதி ராஜா, முதல் மரியாதை என பல வெற்றி படங்களில் நடித்தார்.

Tap to resize

தமிழ் மட்டுமின்றி, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ராதா நடித்துள்ளார். மேலும் 80களில் முன்னணியில் இருந்த ரஜினி, கமல், பிரபு, கார்த்திக், சத்யராஜ் பல முன்னணி நடிகர்களுடன் ராதா ஜோடி சேர்ந்துள்ளார்.

ராதாவின் மூத்த சகோதரி தான் நடிகை அம்பிகா. தனது சகோதரியுன் இணைந்தும் ராதா பல படங்களில் நடித்துள்ளார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட ராதா 1991-ம் ஆண்டு ராஜசேகரன் என்ற ஹோட்டல் அதிபரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் ராதாவின் மகள் கார்த்திகா நாயர், ரோஹன் என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 19-ம் தேதி திருவனந்தபுரத்தில் கேரள பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், திரை பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Karthika Nair Marriage

கார்த்தி நாயர் – ரோஹன் திருமணத்தின் புகைப்படங்கள், ப்ரீ வெட்டிங் போட்டோஷூட், போஸ்ட் வெட்டிங் போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில் ராதா தனது மகள் கார்த்திகாவுக்கு வழங்கிய சீதனம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, 500 சவரன் நகைகளுடன், ஒரு நட்சத்திர ஹோட்டலையும் பரிசாக வழங்கி உள்ளாராம். கார்த்திகாவின் தந்தை ராஜசேகரனுக்கு மும்பை, கேரளா, தமிழ்நாட்டில் பல நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!