தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவருக்கு பான் இந்தியா படங்களும் அதிகளவில் குவிந்து வருகின்றன. அந்த வகையில் இந்தியில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் மெரி கிறிஸ்துமஸ் என்கிற திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடித்துள்ளார்.
24
vijay sethupathi in goa
இதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்துள்ள மற்றுமொரு பாலிவுட் படமும் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அப்படத்தின் பெயர் காந்தி டாக்ஸ். இது ஒரு மெளன படமாகும். இதில் விஜய் சேதுபதி உடன் அதிதி ராவ் ஹைடரி, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ளனர். கமலுக்கு அடுத்தபடியாக மெளன படத்தில் நடித்த நடிகர் என்கிற பெருமையை இப்படத்தின் மூலம் பெற்றுள்ளார் விஜய் சேதுபதி. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
கோவாவில் நடைபெற்று வரும் 54வது சர்வதேச திரைப்பட விழாவில் காந்தி டாக்ஸ் திரைப்படம் முதன்முறையாக திரையிடப்பட்டு உள்ளது. இதற்காக நடிகர் விஜய் சேதுபதி உள்பட காந்தி டாக்ஸ் படக்குழுவினர் கோவாவுக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்திருந்த நடிகை குஷ்பு மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரையும் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார் விஜய் சேதுபதி.
44
vijay sethupathi Riding Boat
அதுமட்டுமின்றி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உடன் சேர்ந்து ஜாலியாக போட்டிங் சென்றிருக்கிறார் விஜய் சேதுபதி. அப்போது அவரே போட்டை ஓட்டிச் சென்றபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவாவில் இருந்து திரும்பியதும் நடிகர் விஜய் சேதுபதி, மிஷ்கின் இயக்கும் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இதன் ஷூட்டிங் ஓரிரு தினங்களில் தொடங்க உள்ளது.