விசித்ரா பாலியல் புகார்! நடிகர் சங்க தலைவராக இருந்தும் விஜயகாந்த் ஏன் ஆக்‌ஷன் எடுக்கல? கணவர் சொன்ன பகீர் தகவல்

First Published | Nov 23, 2023, 12:33 PM IST

நடிகை விசித்ரா 2001-ம் ஆண்டு பாலியல் புகார் அளித்தபோது நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் ஆக்‌ஷன் எடுக்காதது பற்றி விசித்ராவின் கணவர் விளக்கம் அளித்துள்ளார்.

vichithra, vijayakanth

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள நடிகை விசித்ரா, அதில் நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் தன் வாழ்க்கையில் தான் சந்தித்த கசப்பான சம்பவம் பற்றி பேசி இருந்தார். அதன்படி கடந்த 2001-ம் ஆண்டு தெலுங்கு படம் ஒன்றின் ஷூட்டிங்கிற்காக கேரளா சென்றிருந்தபோது, அப்படத்தின் ஹீரோ, முதல் சந்திப்பிலேயே, தன்னை இரவு ரூமுக்கு அழைத்ததாக கூறினார். தான் செல்ல மறுத்ததால் இரவில் ஆட்களை அனுப்பி தன் ஓட்டல் அறையை தட்டி தொந்தரவு செய்ததாகவும் விசித்ரா கண்ணீர் மல்க பேசி இருந்தார்.

Actress Vichithra

அதுமட்டுமின்றி அப்படத்தின் ஷூட்டிங் ஒரு காட்டுப்பகுதியில் நடைபெற்ற போது, கும்பலுடன் நடிக்கும் வன்முறை காட்சி ஒன்றி ஸ்டண்ட் மேன் ஒருவர் தன்னை தகாத முறையில் தொட்டதாகவும், இரண்டு மூன்று முறை இது தொடர்ந்ததால், அந்த நபரை கையும் களவுமாக பிடித்து ஸ்டண்ட் மாஸ்டரிடம் சென்று நிறுத்தியபோது அந்த ஸ்டண்ட் மாஸ்டர் தன்னை கன்னத்தில் பளார் என அறைந்ததாகவும் விசித்ரா கூறி இருந்தார்.

Tap to resize

Vichithra Metoo allegation

விசித்ரா பேசும்போது யார் பெயரையும் குறிப்பிடாவிட்டாலும், நெட்டிசன்கள் அது யார் என்கிற தேடுதல் வேட்டையில் இறங்கினர். பின்னர் அது 2001-ம் ஆண்டு பாலகிருஷ்ணா உடன் அவர் நடித்த தெலுங்கு படம் என்பதும், விசித்ராவை அறைந்தவர் ஏ.விஜய் என்கிற ஸ்டண்ட் மாஸ்டர் என்பதையும் தேடி கண்டுபிடித்து வைரலாக்கினர். அதோடு அந்த சமயத்தில் இதுதொடர்பாக தான் காவல்நிலையம் மற்றும் நடிகர் சங்கத்தில் புகார் அளித்தும் தனக்கு நீதி கிடைக்கவில்லை என கூறிய விசித்ரா, அந்த ஆதங்கத்தில் தான் நான் சினிமாவை விட்டு விலகினேன் என பேசி இருந்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Biggboss vichithra

விசித்ரா புகார் அளித்த 2001-ம் ஆண்டு சமயத்தில் தமிழ்நாட்டில் நடிகர் சங்க தலைவராக இருந்தவர் விஜயகாந்த் தான். அவர் தலைவராக இருந்தும் இந்த விவகாரத்தில் ஆக்‌ஷன் எடுக்கப்படவில்லையா என்பது தான் பலரது கேள்வியாகவும் இருந்தது. தப்பு நடந்தா படத்தில் மட்டுமல்ல நிஜத்தில் தட்டி கேட்கும் மனிதர் என்கிற பெயரெடுத்த விஜயகாந்த் இந்த விவகாரத்தை அவ்வளவு எளிதில் எப்படி விட்டா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

vichithra family

இந்நிலையில், விசித்ராவின் கணவர் இதுகுறித்து பேசி இருக்கிறார். அவர் கூறியதாவது : “விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அப்போது செயலாளர் ஒருவர் இதையெல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம் என கூறியதால் தான் இதில் ஆக்‌ஷன் எடுக்கப்படவில்லை. நடிகர் சங்கத்தில் இருந்துகூட தனக்கு சப்போர்ட் கிடைக்கவில்லை என விசித்ரா மிகவும் வருத்தப்பட்டார். அவர் சினிமாவை விட்டு விலக அதுவும் ஒரு காரணம் தான் என விசித்ராவின் கணவர் ஷாஜி கூறி இருக்கிறார். 2001-ம் ஆண்டு நடிகர் சங்கத்தில் சரத்குமார், ராதாரவி, நெப்போலியன் மற்றும் எஸ்.எஸ்.சந்திரன் ஆகிய 4 பேர் செயலாளராக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...  டைட்டில் ரெடி... அடுத்தடுத்து வெளியாக உள்ள தளபதி 68 படத்தின் 3 தரமான அப்டேட்டுகள் - என்னென்ன தெரியுமா?

Latest Videos

click me!