தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் வாணி போஜன். ஊட்டியில் பிறந்து வளர்ந்த வாணி போஜன் முதலில் விமான பணிப்பெண்னாக இருந்தார்.
இதனிடையே மாடலிங் துறையில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. ஓரிரு விளம்பரங்களில் நடித்த வாணி போஜனுக்கு திரைப்படத்தில் சிறிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.vani bhojan
vani
2010-ம் ஆண்டில் ஓர் இரவு, அதிகாரம் 79 ஆகிய படங்களில் வாணி போஜன் நடித்திருந்தார். ஆனால் இந்த படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. அப்போது சின்னத்திரையில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
விஜய் டிவியில் ஆஹா என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து ஜெயா டிவியில் ஒளிபரப்பான மாயா என்ற சீரியலில் நடித்தார்.
தொடர்ந்து 2013-ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் சீரியலில் சத்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த வாணி போஜனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து. இந்த சீரியல் அவரின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. சத்யா என்ற கேரக்டர் மூலம் பட்டி தொட்டி எங்கும் பரவினார்.
இதையடுத்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக கலந்துகொண்டார். 2017-ம் ஆண்டு வெளியான ‘மீக்கு மாத்திரமே செப்புதா’ என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படம் வணிக ரீதியில் வெற்றி படமாக மாறியது.
Vani Bhojan
2020-ம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழிலும் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படமும் மிகப்பெரிய ஹிட்டானது. இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. லாக்கப், மலேசியா டூ அம்னீசிஆ, ராமே ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும், மிரள், பாயும் ஒளி நீ எனக்கு உள்ளிட்ட படங்களில் நடித்தார்
இதனிடையே ட்ரிபிள்ஸ், தமிழ் ராக்கர்ஸ், செங்காளம் உள்ளிட்ட வெப் சீரிஸிலும் அவர் நடித்தார். படைவனுக்கு அருவாள், கேசினோ, ஆர்யன் போன்ர படங்களிலும் அவர் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன், அவ்வபோது தனது போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது புடவையில் க்யூட்டாக இருக்கும் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். அவரின் இந்த போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் வாணி போஜனின் போட்டோக்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.