உலகளவில் வெளியாகும் படங்களை தர மதிப்பீடு செய்து அதனை பட்டியலிடும் நிறுவனம் தான் IMDB. அந்நிறுவனம் 2023-ம் ஆண்டு இந்தியளவில் மிகவும் பாப்புலராக இருந்த சினிமா நட்சத்திரங்களின் டாப் 10 பட்டியலை வெளியிட்டு உள்ளது. IMDB தளத்தின் மூலம் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தான் இந்த டாப் 10 பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் தான் முதலிடம் பிடித்து உள்ளார்.
24
IMDB top 10 list
அவர் நடிப்பில் இந்த ஆண்டு ஜவான், பதான் என இரண்டு படங்கள் வெளியாகின. அந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டு ஆயிரம் கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தன. அதனால் முதலிடம் ஷாருக்கானுக்கு கிடைத்து இருக்கிறது. இரண்டாம் இடத்தை பாலிவுட் நடிகை ஆலியா பட் பிடித்துள்ளார். அவர் இந்த ஆண்டு கங்குபாய் கத்தியவாடி படத்துக்காக தேசிய விருது வென்றிருந்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோனே மற்றும் வாமிகா கப்பி ஆகியோருக்கு மூன்று மற்றும் நான்காவது இடம் கிடைத்து உள்ளது. இந்த ஆண்டு ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமான தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இந்த பட்டியலில் 5-வது இடத்தை பிடித்திருக்கிறார். அதேபோல் 6-வது இடம் மில்க் பியூட்டி நடிகையான தமன்னாவுக்கு கிடைத்திருக்கிறது.
44
vijay, Ajith
கரீனா கபூர், பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதா, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஆகியோருக்கு முறையே 7, 8 மற்றும் 9-வது இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு 10-ம் இடம் கிடைத்துள்ளது. அவர் நடிப்பில் இந்த ஆண்டு பாலிவுட்டில் பர்சி, மும்பைகார் மற்றும் ஜவான் ஆகிய படங்கள் பாலிவுட்டில் ரிலீஸ் ஆகி இருந்தன. இதனால் இந்திய அளவில் பிரபலமாக திகழ்ந்தார். கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் இந்த பட்டியலில் விஜய், அஜித் இடம்பெறவில்லை.