தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்று கோகிலா, ரூபஸ்ரீ உடன் கச்சேரி நடக்கும் இடத்திற்கு வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
24
Karthigai deepam serial
அதாவது, கோகிலா தீபாவுக்கு போன் செய்து கச்சேரி நடக்கும் இடத்திற்கு வந்துட்டியா என விசாரிக்க, தீபா வந்து விட்டதாகவும் கார்த்திக் இருப்பதாகவும் சொல்கிறாள். ஆனால் கோகிலா இப்போதும் நம்பாமல் சும்மா பொய் சொல்லிட்டு இருக்காதே என திட்ட, தீபா கோகிலாவை அழைத்து சென்று கார்த்திக் இருப்பதை காட்ட அதிர்ச்சி அடைகிறாள். இருந்தாலும் நீ பாடி தான் ஆகணும் என கண்டிஷன் போடுகிறாள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
இதை தொடர்ந்து கோகிலா வசமாக சிக்கிட்டோம் போலயே என பின்பக்கமாக சுவர் ஏறி குறித்து தப்பிக்க முயல இளையராஜா வந்து விடுகிறார். எங்க போறீங்க என்று கேட்க சாப்பிட ஏதாவது கிடைக்குமானு பார்க்க வந்ததாக சமாளிக்க, அவன் எல்லாமே உள்ள இருக்கு என அழைத்து செல்கிறான். மறுபக்கம் தீபாவும் மீனாட்சியும் பேசிக் கொண்டிருக்க கார்த்திக் வந்து விட இருவரும் ஷாக் ஆகின்றனர்.
44
Karthigai deepam today episode
வர மாட்டேனு சொன்னீங்களே என்று கேட்க, மீனாட்சி அக்கா போலாம்னு ஆசைப்பட்டதாக சொல்ல, சரி வாங்க பல்லவி யாருனு கண்டு பிடிக்கலாம் என அழைத்து செல்ல, தீபா டென்ஷனுடன் செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.