விக்னேஷ் சிவனை போல் மகிழ் திருமேனியையும் கழட்டிவிடப் போகிறாரா அஜித்? விடாமுயற்சி தாமதம் ஆவது ஏன்?

First Published Jun 28, 2023, 8:30 AM IST

அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆவதற்கான காரணம் வெளியாகி உள்ளது.

vidaamuyarchi

நடிகர் அஜித்தின் கால்ஷீட் கிடைக்காமல் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் புலம்பி வரும் வேளையில், அவரின் கால்ஷீட்டை வைத்துக்கொண்டே லைகா நிறுவனம் விடாமுயற்சி படத்தை தொடங்காமல் இருப்பது பலருக்கும் புரியாத புதிர் ஆக உள்ளது. இந்தப் படம் அஜித் நடிக்கும் 62-வது படமாகும். இதனை முதலில் ஏகே 62 என்கிற தற்காலிக டைட்டில் உடன் தொடங்கினர். கடந்த ஆண்டு மார்ச் மாதமே இப்படம் குறித்த அறிவிப்பும் வெளியானது.

விக்னேஷ் சிவன் தான் இப்படத்தை இயக்குவார் என்றும் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதையடுத்து ஜனவரி மாதம் அஜித் நடித்த துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆனதும் ஏகே 62 படத்தின் ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டிருந்தார் விக்னேஷ் சிவன். ஷூட்டிங் ஆரம்பமாவதற்கு சில நாள் முன் அவர் சொன்ன கதை திருப்தி அளிக்காததால் அவரை இப்படத்தில் இருந்து அதிரடியாக நீக்கினர்.

Latest Videos


vidaamuyarchi

விக்னேஷ் சிவன் நீக்கப்பட்ட பின்னர் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்க கமிட் ஆனார். கடந்த பிப்ரவரி மாதமே மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்து படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளும் தொடங்கப்பட்டன. இதற்காக மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தன்னுடைய உதவி இயக்குனர்களுடன் ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வந்தார் மகிழ் திருமேனி. அவர் கமிட் ஆகி 3 மாதங்களுக்கு பின்னர் ஏகே 62 படத்திற்கு விடாமுயற்சி என பெயரிட்டுள்ளதாக அறிவித்தது படக்குழு.

இதையும் படியுங்கள்... நாட்டு மக்களை அறிவில்லாதவர்கள் என நினைத்தார்களா? ஆதிபுருஷ் படக்குழுவுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி!

vidaamuyarchi

சரி பெயரை அறிவித்த கையோடு ஷூட்டிங்கையும் தொடங்கி விடுவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதோ... அதோ என ஷூட்டிங் தொடங்கும் தேதியை தள்ளிப்போட்டு வருகின்றனர். விடாமுயற்சி படப்பிடிப்பு தாமதம் ஆவதற்கு மகிழ் திருமேனி அளித்த ஸ்கிரிப்ட்டும் அஜித்திற்கு திருப்தி அளிக்காதது தான் காரணம் என கூறப்படுகிறது. ஆனால் விக்னேஷ் சிவனை போல் மகிழ் திருமேனியை கழட்டிவிடும் ஐடியாவில் அஜித் இல்லையாம்.

Vijay, Ajith

ஸ்கிரிப்ட்டில் மாற்றங்களை செய்யச் சொல்லிவிட்டு லண்டனுக்கு பறந்துவிட்டாராம் அஜித். சரி, விடாமுயற்சி ஷூட்டிங் எப்போ தான் ஆரம்பமாகும் என விசாரித்தால், ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. விஜய்யின் லியோ படத்துக்கு போட்டியாக இப்படம் இருக்கும் என பார்த்தால், தற்போது தளபதி 68 படத்துக்கு போட்டியாக மாறிவிட்டது. விஜய்யின் தளபதி 68 படமும் ஆகஸ்ட் மாதம் தான் தொடங்க உள்ளது. திட்டமிட்டபடி ஷூட்டிங்கை முடித்தால் இந்த இரண்டு படங்களும் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் உங்கள் அன்பின் முன்னே... தந்தை குறித்து சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

click me!