நடிகை சமந்தா தற்போது செர்பியாவில் இருக்கிறார். இவர் நடித்து வந்த வெப் தொடரான, சிட்டாடலின், சமீபத்திய படப்பிடிப்புஅங்கு நடைபெற்றது. இதன் காரணமாக சமந்தா மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினரும் அங்கு தான் உள்ளனர்.
இந்தியாவுக்கு வருவதற்கு முன்னர், நடிகை சமந்தா செர்பியா நகரில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து. அதன் அழகை ரசித்து வருகிறார். மேலும் தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக செல்லும் இடங்களில் எல்லாம் புகைப்படம் எடுத்து அதனை வெளியிட்டு வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
செர்பியாவிற்கு சென்றுள்ள சிட்டாடல் குழு, அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து, வருண் தவான், சமந்தா, ராஜ் மற்றும் டிகே ஆகியோர் ஜனாதிபதியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படங்களை அவர்கள் வெளியிட அது மிகவும் வைரலாக பார்க்கப்பட்டது.