90களின் பிரபல ஹிந்தி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் பூஜா பட், எந்த ஒரு சர்ச்சையாக இருந்தாலும் அதனை வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர். இந்த குணமே இவரை பிரபலமாகவும் மாற்றியது. இவர் மணீஷ் மகிஜா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், எந்நேரமும் குடியுடன் மட்டுமே வாழ்ந்து கொண்டு, குடித்தனத்தை மறந்ததால்... கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.
இது குறித்து பூஜா ஒரு பேட்டியில் கூறுகையில், தன் தந்தை தங்களுடன் மிகவும் வெளிப்படையாக இருந்தார், அவர் யாருடன் திருமணத்திற்கு அப்பாற்பட்ட தொடர்பு வைத்திருந்தார் என்பதை கூட சொல்வார். எனக்கு என் தந்தை, சோனி ரஸ்தானுடன் தொடர்பு வைத்திருந்தது தெரியும்.எனவே சோனியை வெறுக்க ஆரம்பித்தேன். சோனி மகேஷ் பட்டை தன்னிடமிருந்து பறித்துவிடுவார் என்று நான் நினைத்தேன் ஆனால் தன்னுடைய அம்மா, என்னிடம் பேசி புரிய வைத்தார். தந்தை எந்த அளவுக்கு என் மீது பாசம் வைத்துள்ளார் என்பதை கூறினார்.
இதன் பின்னர் என் தந்தையும் நானும் பேச துவங்கினோம். என் தந்தை மிகவும் நன்றாகவே என்னை பார்த்து கொண்டார் என்று தெரிவித்துள்ளார். மேலும் அப்படி பட்ட நேரத்தில் தான், ஒரு அட்டை படத்திற்கு மகேஷ் பட் தன்னுடைய மகளுடன் போட்டோ ஷூட் ஒன்றையும் நடத்தியுள்ளார். அப்போது தன்னுடைய மகளை மடியில் அமரவைத்து, உதட்டில் மகள் பூஜாவுக்கு முத்தம் கொடுத்தது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.
மகன் கௌஷிக் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடிய ரோஜா! வைரலாகும் போட்டோஸ்.!
பெத்த மகளுக்கு இப்படி முத்தம் கொடுப்பது தகுமா? என்பது போல் பல விமர்சனங்கள் வெடிக்க இதுகுறித்து விளக்கம் கொடுக்க, பிரஸ் மீட் ஒன்றை ஏற்பாடு செய்தார். அதில் கொஞ்சம் கூட தன்னுடைய தவறை உணராதபடியே பேசிய மகேஷ் பட், ஒரு கட்டத்தில் அனைவர் மத்தியிலும், பூஜா தன்னுடைய மகளாக இல்லாமல் இருந்திருந்தால் அவரையே திருமணம் செய்வேன் என கூறியது 10 மடங்கு சர்ச்சையை வெடிக்க செய்தது.