சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன் கூலி பட இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது, இரண்டு படம் ஹிட் கொடுத்த இளம் ஹீரோக்களே தற்போது பிரைவேட் ஜெட் கேட்கிறார்கள் என கூறினார்.
தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர்ஸ் இருந்து வருகிறது. அந்நிறுவனம் தயாரிப்பில் தற்போது கூலி என்கிற பிரம்மாண்ட திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் அமீர்கான், சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், நாகர்ஜுனா உள்பட ஒட்டுமொத்த படக்குழுவுமே கலந்துகொண்டது.
24
சலசலப்பை ஏற்படுத்திய கலாநிதி மாறனின் பேச்சு
கூலி பட இசை வெளியீட்டு விழாவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன் கலந்துகொண்டு பேசியது இணையத்தில் பேசு பொருள் ஆகி உள்ளது. அதில் ரஜினிகாந்த் தான் ஒன்லி சூப்பர்ஸ்டார். இத்தனை ஹிட் கொடுத்தும் மிகவும் எளிமையாக இருக்கிறார் என்று புகழ்ந்து பேசிய அவர், அதன்பின் பேசியது தான் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இரண்டு படம் ஹிட் கொடுத்தாலே பிரைவேட் ஜெட் கேட்கிறார்கள். இளம் நடிகர்களே இப்படி ஆடிடூடு காட்டுகிறார்கள். ஆனால் ரஜினி சார் மிகவும் எளிமையாக இருக்கிறார் என பேசி இருந்தார். கலாநிதி மாறனின் இந்த பேச்சு இணையத்தில் வைரல் ஆனது.
34
யார் அந்த ஹீரோ?
கலாநிதி மாறனிடம் பிரைவேட் ஜெட் கேட்டு அடம்பிடித்த ஹீரோ யார் என்பதை நெட்டிசன்கள் வலைவீசி தேடி வருகிறார்கள். அவர் இரண்டு படம் ஹிட் கொடுத்தவர் என சொன்னதால் அது பிரதீப் ரங்கநாதனாக தான் இருக்கும் என கூறி வருகின்றனர். இந்த நிலையில், பத்திரிகையாளர் சுபைர், இந்த விவகாரம் பற்றி பேசி இருக்கிறார். சன் பிக்சர்ஸிடம் நயன்தாரா பிரைவேட் ஜெட் கேட்டது பெரிய பிரச்சனை ஆனதாகவும், ஐதராபாத்தில் அண்ணாத்த படம் நடந்தபோது தனக்கு தனி விமானம் வேண்டும் என நயன்தாரா அடம்பிடித்ததாக சுபைர் அந்த யூடியூப் பேட்டியில் கூறி இருக்கிறார்.
ஆனால் கலாநிதி மாறன் கூலி பட ஆடியோ லாஞ்சில் ஹீரோவை பற்றி தான் பேசி இருந்தார். அதன்படி பார்த்தால் அந்த ஹீரோ சிவகார்த்திகேயனாக தான் இருக்க முடியும் என சுபைர் கூறி இருக்கிறார். ஏனெனில் சமீப காலமாக சன் பிக்சர்ஸில் படம் பண்ணிய இளம் ஹீரோ என்றால் அது சிவகார்த்திகேயன் தான். அதனால் அவர் இருக்க வாய்ப்பு இருப்பதாக சுபைர் தெரிவித்துள்ளார். ஆனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறார்கள். ரஜினியைப் போல் சிவகார்த்திகேயனும் மிகவும் எளிமையானவர் என அவர்கள் கூறி வருகிறார்கள்.