மனோ பாலாவுக்கு என்ன பிரச்சனை? மரணத்திற்கான காரணம் தெரியுமா... வெளியான ஷாக்கிங் தகவல்!

First Published | May 3, 2023, 3:12 PM IST

நடிகர் மனோ பாலாவின் மரணம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலக ரசிகர்களையும், பிரபலங்களையும், உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரின் மரணத்திற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 

மனோ பாலா பார்ப்பதற்கு வெடவெடவென ஒல்லியான தோற்றத்தில் இருந்தாலும், எறும்பு போல் எந்நேரமும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தவர். தமிழ் சினிமாவில்.. இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் சிஷ்யனாக, அவர் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளியான 'புதிய வார்ப்புகள்' திரைப்படத்தின் மூலம் துணை இயக்குனராக அறிமுகமாகி, பின்னர் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என ரசிகர்களாலும் திரையுலக பிரபலங்களாலும் நன்கு அறியப்பட்டவர் மனோபாலா.

முன்னணி பிரபலமாக இருந்தாலும், ரசிகர்கள் முன்பு எந்தவித பந்தாவும் இல்லாமல், மிகவும் தன்மையாகவும், அன்பாகவும் பழகக்கூடிய மனோ பாலா, தன்னுடைய 69 வயதிலும்... 16 வயது பையன் போல் ஸ்டைலிஷாகவும் எனெர்ஜிட்டிக்காகவும் இருக்க கூடியவர். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பு ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

அருமை நண்பா என கலங்கிய ரஜினி... மனோபாலா மறைவுக்கு கண்ணீர்மல்க இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்

Tap to resize

இதைத்தொடர்ந்து அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டதாகவும், சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் உடல் நலம் தேறிய மனோபாலா மீண்டும் திரைப்பட பணிகளில் கவனம் செலுத்த துவங்கினார். இந்நிலையில்  கடந்த 15 நாட்களாகவே மனோ பாலா உடல்நிலை பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அவருக்கு கல்லீரலில் பிரச்சனை இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அதற்கான சிகிச்சையை  மேற்கொண்டனர்.  நோயின் தாக்கம் அதிகரித்ததால் வீட்டில் இருந்தே அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நலயில்  இன்று காலை சிகிச்சை பலனின்றி மனோபாலா உயிரிழந்தார். இவரின் இழப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும், திரையுலக பிரபலங்களையும், அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆஞ்சியோ செய்த ஒரே வாரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட மனோபாலா! திடீர் மரணத்தால் அதிர்ச்சியில் திரையுலகம்!

மனோ பாலாவின் மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளம் மூலமாகவும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் சாலிகிராமத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு நேரடியாக சென்று பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!