தமிழ் சினிமாவில், காமெடி நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக ஆளுமை கொண்டவராக திகழ்ந்த மனோபாலா உடல்நல பிரச்சனை காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
25
manobala
69 வயதாகும், மனோபாலா தமிழ் சினிமாவில், 1979-ம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கிய புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குனராக தன்னுடைய திரைப்பயணத்தை துவங்கியவர். மேலும் இப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இதை தொடர்ந்து, 1982-ம் ஆண்டு ஆகாய கங்கை என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார்.
சுமார் 15 படங்களுக்கு மேல் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ள மனோபாலா, சதுரங்க வேட்டை போன்ற சில படங்களையும் தயாரித்துள்ளார். இயக்குனர் தயாரிப்பாளர் என்பதை தாண்டி, தற்போதைய ரசிகர்கள் மத்தியில் காமெடி நடிகராக தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர்.
45
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பு ஏற்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவமனையில் இருந்த மனோ பாலாவை பல பிரபலங்கள் நேரில் சென்று நலம் விசாரித்து வந்தனர்.
ஆஞ்சியோ சிகிச்சைக்கு பின்னர், உடலநலம் தெரிய மனோ பாலா... மீண்டும் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் கடந்த 10... 15... தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்து வந்த மனோபாலா உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.