ஆஸ்கருக்கு போகும் தங்கலான்...! விக்ரம் - பா.இரஞ்சித் கூட்டணியின் தரமான சம்பவம் லோடிங்

First Published | May 3, 2023, 10:50 AM IST

பா.இரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப உள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படங்களை இயக்குபவர் பா.இரஞ்சித். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். சீயான் விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பார்வதி நடிக்கிறார். மேலும் பசுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

தங்கலான் படம் கே.ஜி.எஃப் எவ்வாறு உருவானது என்பதை மையமாக வைத்து தயாராகி வருகிறது. இப்படத்திற்காக நடிகர் விக்ரம் உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விக்ரம், மாளவிகா மோகனன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்... ‘பிக்பாஸ் 7' ஆரம்பிக்கலாங்களா... இப்போதான் 6-வது சீசன் முடிஞ்சது அதுக்குள்ள அடுத்த சீசனா! வேறலெவல் அப்டேட் இதோ

Tap to resize

தங்கலான் படத்தை இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர். இப்படத்தின் மேக்கிங் வீடியோ அண்மையில் நடிகர் விக்ரமின் பிறந்தநாளன்று ரிலீஸ் செய்யப்பட்டது. அதில் இப்படத்திற்காக விக்ரம் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் என்பதை காட்சிப்படுத்தி இருந்தனர். இதைப்பார்த்த ரசிகர்கள் இப்படத்திற்காக விக்ரமுக்கு நிறைய விருதுகள் கிடைக்கும் என பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

ரசிகர்கள் ஆசைப்பட்டது போல் இப்படத்திற்காக விக்ரமுக்கு உலகளவில் இருந்து விருதுகள் குவியும் போல தெரிகிறது. சமீபத்திய பேட்டியில் தங்கலான் குறித்து பேசிய தயாரிப்பாளர், தங்கலான் படம் உலக சினிமா ரசிகர்களை கவரும் படமாக இருக்கும் என்பதால் இதனை உலகளவில் பல்வேறு மொழிகளில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தெரிவித்தார். மேலும் இப்படத்தை ஆஸ்கர், கேன்ஸ் போன்ற புகழ்பெற்ற விருது விழாக்களுக்கும் அனுப்ப உள்ளதாக கூறினார். இதைவைத்து பார்க்கும்போது தங்கலான் உலகளவில் விருதுகளை குவிக்கும் படமாக இருக்கும் என தெரிகிறது. 

இதையும் படியுங்கள்... தி கேரளா ஸ்டோரி படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ய வேண்டாம் - உளவுத்துறை விடுத்த திடீர் அலர்ட்

Latest Videos

click me!