தங்கலான் படத்திற்காகவும் நடிகர் விக்ரம் உடல் எடையை குறைத்து மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார். இப்படத்தில் விக்ரம் உடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதன் இறுதிக்கட்ட ஷூட்டிங் சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நேற்று தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் நடிகர் விக்ரமும் கலந்துகொண்டார்.