காஜல் அகர்வால் பரபரப்பாக பல படங்களில் நடித்து கொண்டிருக்கும் போதே... திடீர் என கர்ப்பமானார் எனவே நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்காமல் இருந்த நிலையில், குழந்தை பிறந்து, சில மாதங்கள் ஆகி விட்டதால், மீண்டும் திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியானது.
அந்த வகையில் தற்போது மளமளவென உடல் எடையை குறித்து செம்ம பிட்டாக மாறியுள்ள காஜல் அகர்வால் வானவில் போன்ற வண்ண வண்ண நிறத்தில் உடை அணிந்து சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
விரைவில் காஜல் அகர்வால் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க உள்ள 'இந்தியன்' படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் 2 படத்திற்காக களரி பயிற்சி, குதிரை ஏற்றம்... போன்ற பயிற்சிகளை காஜல் மேற்கொண்டு வருகிறார். அவ்வப்போது இது குறித்த புகைப்படங்களையும், விடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.
அப்படி இவர் வெளியிடும் அனைத்து வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவது மட்டும் இன்றி, காஜல் அகர்வாலின் முயற்சியையும் ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று, காஜல் அகர்வால் தன்னுடைய கணவர் கிச்சுலு மற்றும் மகன் நீலுடன் மும்பை ஏர்போர்ட் வந்த போது முதன் முறையாக மகனின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டியுள்ளார்.
மிகவும் கியூட்டாக இருக்கும் நீலின் புகைப்படங்களும், வீடியோக்களும் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
குழந்தை பிறந்த பின்னர் மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய உடல் எடையை வெகுவாக குறைத்துள்ள காஜல் அகர்வால்... துளியும் மேக்அப் போடாமல் அழகு தேவதையாக மிளிர்கிறார்.