கடத்தப்பட்டாரா நடிகை சுனேனா? இரண்டு நாள் தீவிரமாக தேடிய போலீஸ்! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!

First Published | May 20, 2023, 7:39 PM IST

பிரபல நடிகை சுனேனா கடத்தப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோவை, தொடர்ந்து இது குறித்து போலீசார் தீவிர தேடி வந்த நிலையில் கடைசியில் அவர்களுக்கே அதிர்ச்சி கொடுக்கும் படியான தகவல் வெளியாகியுள்ளது.
 

மஹாராஷ்ராவை சேர்ந்த,  நடிகை சுனைனா... 2005 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர். இதை தொடர்ந்து, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் ஹீரோயினாக நடிக்க துவங்கினார். குறிப்பாக தமிழில், நடிகை தேவயானியின் சகோதரர் நகுல் கதாநாயகனாக அறிமுகமான 'காதலில் விழுந்தேன்' திரைப்படத்தில்,புதுமுக ஹீரோயினாக கோலிவுட்டில் தன்னுடைய கலை பணியை துவங்கினார்.

இந்த படத்தில் நகுல் - சுனேனா கெமிஸ்ட்ரிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கிடைத்ததை தொடர்ந்து, மீண்டும் இருவரும் 'மாசிலாமணி' படத்தில் ஜோடி சேர்ந்தனர். அடுத்தடுத்த படங்களில், இருவரும் சேர்ந்து நடித்ததால்... சில காதல் சர்ச்சைகளும் இவர்களை வட்டமிட்ட நிலையில், பின்னர் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்காமல், இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

படம் டல் அடித்தாலும்... முதல் நாள் வசூலில் தாறுமாறு செய்த 'பிச்சைக்காரன் 2'!படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!

Tap to resize

மற்ற மொழிகளை விட தமிழில், நடிக்க சுனைனாவுக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன. அந்தவகையில்  யாதுமாகி, வம்சம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம், திருத்தணி , நீர் பறவை, சமர், வன்மம், தெறி நம்பியார், போன்ற பல படங்களில் வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்தார். ஆனால் இவரால், முன்னணி ஹீரோயின் என்கிற இடத்தை பிடிக்க முடியவில்லை.
 

சமீப காலமாக கதைக்கும், கதாபாத்திரத்திற்கும், முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்து வரும் சுனேனா, கடைசியாக விஷாலுக்கு ஜோடியாக லத்தி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு, அனைவர் மத்தியிலும் பாராட்டப்பட்டது. இதை தொடர்ந்து ரெஜினா என்கிற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் சுனைனா.

TRP ரேட்டிங்கில் இந்த வாரம் கெத்து காட்டிய டாப் 10 சீரியல்கள்!

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர், சுனைனாவை காணவில்லை என அவர் நடித்து வரும் 'ரெஜினா' படத்தின் தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட, அது  தீயாகப் பரவியது. இதில் சுனைனாவின் செல் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் கடத்தப்பட்டாரா என்ற கேள்வியுடன் அந்த வீடியோ வைரலானது.

இப்படி காணாமல் போனதாக சுனேனா பற்றி வெளியான தகவலை தொடர்ந்து ரசிகர்களும், நெட்டிசன்களும் அவரை காப்பாற்ற வேண்டும் என தங்களின் கருத்துக்களை வெளியிட்டுவந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தங்களின் விசாரணையை துவங்கினர்.  சுனேனா எங்கெல்லாம் சென்றார், என்பது குறித்தும் அவர் தோழிகளுடன்  நுங்கம்பாக்கம், கோயம்பேடு, விருகம்பாக்கம் போன்ற பகுதிகளில் யாரை சந்தித்தார்? என்பது பற்றி தகவல்கள் சேகரிக்கப்பட்டது.

அட கன்றாவியே... ஓடும் பேருந்தில் நடிகை முன் சுய இன்பத்தில் ஈடுபட்ட நபர்! வீடியோ எடுத்து... அளவிட்ட சம்பவம்!

போலீசாரம் இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வந்த நிலையில்... இந்த செய்தியை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனத்திற்கு நேரடியாக சென்று விசாரித்தனர். அப்போதுதான் இந்த வீடியோ தொடர்பான உண்மை தகவல் தெரியவந்தது. சமீப காலமாகவே படங்களை புரோமோட் செய்ய படக்குழுவினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அந்த தகவல் இந்த கடத்தல் வீடியோ வெளியிட்டது கூட, படத்தின் புரோமோஷனை முன்னிட்டு தான் என தெரியவந்தது.

விரைவில் இதுகுறித்த தகவலை வெளியிட படக்குழு நினைத்த நிலையில், போலீசாருக்கு தேவையில்லாத அலைச்சலை கொடுத்ததற்கு, தயாரிப்பு தரப்பில் தங்களின் வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர். படத்தை வித்தியாசமாக புரோமோட் செய்ய இப்படி சுனைனா உண்மையில் கடத்தப்பட்டது போல் வீடியோ வெளியிட்டதாக கூறியதை தொடர்ந்து, இந்த தகவல் போலிசாருகே அதிச்சிகரமாக இருந்தது. மேலும் இது போல் படத்தை ப்ரோமோஷன் செய்ய வேண்டாம் என பலர் தங்களின் அதிருப்திகளை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

கேன்ஸ் பட விழாவில் நயன்தாரா இல்லாமல் கலந்து கொண்ட விக்னேஷ் சிவன்! கோட்.. சூட்டில் செம்ம கெத்தா கொடுத்த போஸ்!

Latest Videos

click me!