நடிகை குஷ்பு முஸ்லீம் மதத்தவராக இருந்தாலும்.. இந்து தெய்வத்துக்கு கோவில் கட்டிய அவரின் முன்னோர்! ஆச்சர்ய தகவல்

Published : May 19, 2023, 06:59 PM IST

நடிகை குஷ்பு தன்னுடைய முன்னோர்கள் (தாத்தா) ஹிந்து தெய்வத்திற்கு கோவில் கட்டியது குறித்து, தன்னுடைய twitter-யில் புகைப்படம் வெளியிட்டு கூறி, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார்.  

PREV
17
நடிகை குஷ்பு முஸ்லீம் மதத்தவராக இருந்தாலும்.. இந்து தெய்வத்துக்கு கோவில் கட்டிய அவரின் முன்னோர்! ஆச்சர்ய தகவல்

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தமிழை தாண்டி ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் கதாநாயகியாக கலக்கியுள்ள குஷ்பு தற்போது, நடிப்பு, திரைப்பட தயாரிப்பை தாண்டி அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

27
Khushbu Sundar

ஏற்கனவே திமுக காங்கிரஸ், போன்ற கட்சிகளில் இணைந்து பணியாற்றிய குஷ்பு தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். சமீபத்தில் அவருக்கு பாரதிய ஜனதா கட்சியில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி வழங்கப்பட்டது. மேலும் தற்போது பிரான்சில் நடந்து வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பாஜக சார்பில், அமைச்சர் எல்.முருகனுடன் இவரும் பிரான்ஸ் சென்றுள்ளார்.

BMW பைக் மீது அமர்ந்து... பந்தாவாக போஸ் கொடுத்த ஷிவானி!
 

37
Kushboo Sundar

சோசியல் மீடியாவில், எப்போதும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு.. அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது மட்டும் இன்றி,  தன்னுடைய கருத்துக்கள், விமர்சனங்கள் மற்றும் சில ஆச்சர்ய தகவல்களையும் பகிர்ந்து வருகிறார்.
 

47
Kushboo Sundar

அந்த வகையில் தற்போது, கேரளாவில் அமைந்திருக்கும் ஒரு கோவிலில் நின்றபடி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, இது தன்னுடைய தாயாரின் மாமனார் அதாவது தன்னுடைய தாத்தா கட்டிய கோவில் என கூறியுள்ளார்.

சோகமான முகம்... கண்கள் வீங்கி அழுது கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ் ரைசா!
 

57

நடிகை குஷ்பு ஒரு இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். பிறப்பால் முஸ்லிமாக அறியப்படும் இவருடைய தாத்தாவும் ஒரு இஸ்லாமியராக இருந்தாலும், ஹிந்து தெய்வத்திற்கு கோவில் கட்டி கொடுத்துள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. அதே போல் இந்து தெய்வங்கள் மீதும் அவர்களுக்கு உள்ள நம்பிக்கையை எடுத்து காடுப்பது போலவே இந்த செயல் உள்ளது. குஷ்பு பகிர்ந்துள்ள இந்த தகவல் ரசிகர்களை, ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

67

நடிகை குஷ்பு இயக்குனர் சுந்தர் சி-யை திருமணம் செய்து கொண்ட பின்னர், எவ்வித மத வேறுபாடும் இன்றி எம்மதமும் சம்மதம் என்கிற கொள்கையோடு வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் கூட, இவர் திருமணத்திற்காக மதம் மாறியதாக சில வதந்திகள் சமூக வலைதளத்தில் வட்டமிட்ட நிலையில், தான் மதம் மாறவில்லை என்றும், மாற வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை என்றும் நான் ஒரு இந்தியன் என அதிரடியாக கூறினார். அதே போல், நம் நாட்டில் இருக்கும் திருமண சட்டம் குறித்து என் மீது குற்றம் சாட்டுபவர்கள் கேள்விப்பட்டதே இல்லை என்பது துரதிஷ்டமே என்று தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Raasa Kannu: ஏ.ஆர்.ரகுமான் இசையில்... வடிவேலு பாடிய 'ராசா கண்ணு' லிரிக்கல் பாடல் வெளியானது! - வீடியோ

77

இந்நிலையில் கேரளாவில் அமைந்துள்ள, குஷ்புவின் தாத்தா கட்டிய கோவிலில் நின்றபடி அவர் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படம் வைரலாக  பார்க்கப்பட்டு வருகிறது. 

click me!

Recommended Stories