அதிரடியாக மாற்றப்பட்ட STR 48 பட ஹீரோயின்! தீபிகா படுகோனேவை ஓரங்கட்டிவிட்டு வாரிசு நடிகையுடன் ஜோடிசேரும் சிம்பு

Published : May 19, 2023, 03:55 PM IST

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள எஸ்.டி.ஆர்.48 படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
அதிரடியாக மாற்றப்பட்ட STR 48 பட ஹீரோயின்! தீபிகா படுகோனேவை ஓரங்கட்டிவிட்டு வாரிசு நடிகையுடன் ஜோடிசேரும் சிம்பு

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. அவர் நடிப்பில் அடுத்ததாக எஸ்.டி.ஆர்.48 என்கிற திரைப்படம் தயாராக உள்ளது. தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ள இப்படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார். எஸ்.டி,ஆர் 48 படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது லண்டன் சென்றுள்ள நடிகர் சிம்பு, இப்படத்திற்காக பிரத்யேக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

24

இதனிடையே இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்படி அவர் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ரூ.30 கோடி சம்பளமாக கேட்டது மட்டுமின்றி பல்வேறு கண்டிஷன்களையும் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் தீபிகா படுகோனேவை நடிக்க வைக்கும் முடிவை கைவிட்ட படக்குழு வேறு நடிகைகளை தேடும் பணியில் இறங்கி இருந்தது.

இதையும் படியுங்கள்... விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி கன்பார்ம்... ஆனால் இசையமைக்கப்போவது யுவன் இல்லையாம்..! வெளியான ஷாக்கிங் தகவல்

34

அந்த வகையில் தற்போது சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க படக்குழு முடிவெடுத்துள்ளதாம். இதன்மூலம் சிம்புவும், கீர்த்தி சுரேஷும் முதன்முறையாக கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக இப்படம் தயாராக உள்ளதாகவும், இதனை சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாக்க கமல் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.

44

ஏற்கனவே நடிகை கீர்த்தி சுரேஷ் கைவசம் தெலுங்கில் சிரஞ்சீவியின் போலா சங்கர், தமிழில் ரிவால்வர் ரீட்டா, ரகுதாதா, ஜெயம் ரவியின் சைரன் மற்றும் மாமன்னன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக மாமன்னன் போன்ற படங்கள் உள்ளன. அந்த லிஸ்ட்டில் சிம்புவின் எஸ்.டி.ஆர்.48 படமும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. சிம்பு - கீர்த்தி சுரேஷ் ஜோடியின் கெமிஸ்ட்ரி எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்... சோகமான முகம்... கண்கள் வீங்கி அழுது கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ் ரைசா!

Read more Photos on
click me!

Recommended Stories