தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், கடைசியாக வெளிவந்த வாரிசு படத்தின் மூலம் தெலுங்கிலும் தனக்கான ரசிகர் பட்டாளத்தை விரிவுபடுத்தினார். அப்படம் தமிழுக்கு நிகராக தெலுங்கிலும் சக்கைப்போடு போட்டது. அடுத்ததாக இந்தி மார்க்கெட்டையும் பிடிக்க முடிவெடுத்துள்ள விஜய், லியோ படத்தை பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இறுதியாக அனைத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு உடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளார். இந்த கூட்டணி இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இப்படத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ.200 கோடி சம்பளமாக வழங்கப்பட இருப்பதாகவும் அடுத்தடுத்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
வழக்கமாக வெங்கட் பிரபு இயக்கும் படம் என்றாலே யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பார். ஒருவேளை அவர் பிசியாக இருந்தால், தன் தம்பி பிரேம்ஜியை இசையமைக்க வைத்து படத்தை முடித்துவிடுவார் வெங்கட் பிரபு. ஆனால் தளபதி 68 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கப்போவதில்லை என்கிற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இது பெரிய பட்ஜெட் படம் என்பதால் பிரேம்ஜிக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்படாது என்பதால், வேறு முன்னணி இசையமைப்பாளரை கமிட் செய்யும் ஐடியாவில் படக்குழு உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... கடைசி நேரத்தில் எப்.ஐ.ஆரில் பெயர் சேர்ப்பு... போதை வழக்கில் வேண்டுமென்றே சிக்கவைக்கப்பட்டாரா ஆர்யன் கான்?