தனுஷை வைத்து சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய, வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலுக்கு பிஏ-வாக ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் பிக்பாஸ் ரைசா.
அந்த வகையில், யுவன் ஷங்கர் ராஜா... தயாரிப்பில் வெளியான 'யார் பிரேமா காதல்' திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் கலெக்ஷனை அள்ளியது.
சமீபத்தில் கூட கடற்கரையில், பிகினி உடை போஸ், மற்றும் மோனோகினி உடையில் நெட்டட் டாப் அணிந்து இவர் பகிர்ந்த புகைப்படம் வேறு லெவலுக்கு பார்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது பிக்பாஸ் ரைசா தன்னுடைய சமூக வலைதளத்தில் கண்கள் சிவந்து அழுது கொண்டிருக்கும் ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து ரைசாவின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதே நேரம் உங்களின் சோகத்திற்கு எது காரணமாக இருந்தாலும், எல்லாம் விரைவில் சரியாகும் என சிலர் ஆறுதல் வார்த்தைகளையும் தெரிவித்து வருகின்றனர். திரையுலகில் பிசியாக நடித்து வரும் ரைசா தற்போது கருங்காப்பியம், லவ், தி செஸ், அலைஸ், காதலிக்க யாரும் இல்லை, போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இன்னும் சில படங்களில் இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தையும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.