பிரான்ஸ் நாட்டில் கடந்த மே 16-ஆம் தேதி துவங்கிய, கேன்ஸ் திரைப்பட விழாவில் பல இந்திய நட்சத்திரங்கள் கலந்து கொண்டு ரெட் கார்பெட் நிகழ்ச்சியில் கேட் வாக் செய்து வருகிறார்கள். குறிப்பாக, நடிகை மிருணாள் தாகூர், ஊர்வசி ரவுதலே, ஐஸ்வர்யா ராய், எமி ஜாக்சன் போன்ற பல பிரபலங்கள் அணிந்திருந்த உடைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் இயக்குனர், விக்னேஷ் சிவன்... கேன்ஸ் திரைப்பட சென்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செத்தார். ஆனால் புகைப்படங்கள் எதையும் வெளியிடவில்லை. எனவே, விக்னேஷ் சிவன் கேன்ஸ் பட விழாவிற்கு நயன்தாராவுடன் சென்றதாகவே ரசிகர்கள் நினைத்தனர்.
கருப்பு நிற கோட் - சூட்டில், செம்ம கெத்தாக விக்கி உள்ளார். மேலும் நயன்தாரா... தன்னுடைய இரட்டை குழந்தைகளை கவனிக்கு கொள்ள வேண்டும் என்பதற்காக, இந்த கேன்ஸ் பட விழாவில் கலந்து கொள்ள வில்லை என தெரிகிறது. விக்கியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.