விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்குமே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற மொழியில் ஹிட்டடித்த சீரியல்களை தமிழிலும், தமிழில் வெற்றி பெரும் சீரியல்களை மற்ற மொழிகளுக்கும் ரீமேக் செய்வது பல வருடங்களாக நடந்து வருகிறது.
26
நீ நான் சீரியல் நடிகை விஜே தனுஷிக்:
அந்த வகையில் 'இஸ் பியார் கோ கியானா தூண்' என்கிற ஹிந்தி ரொமான்டிக் சீரியலின், ரீமேக்காக தற்போது 'நீ நான் காதல்' என்கிற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த தொடரில் ஹீரோவாக நடிகை சுவாசிக்காவின் கணவரும், சீரியல் நடிகருமான பிரேம் ஜாக்கோப் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை வர்ஷினி சுரேஷ் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ஹர்ஷிதா ஸ்ரீ தாஸ், சங்கரேஷ் குமார், நவீன் முரளிதரன், விஜே தனுஷிக் விஜயகுமார், உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியலை ராஜன் சுந்தரம் என்பவர் இயக்கி வருகிறார். ஒரு வருடத்தை கடந்து, விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் இருந்து தற்போது விஜே தனுஷிக் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
46
விஜய் டிவி சீரியலில் இருந்து விலகும் நடிகை :
கடந்த ஆண்டு விஜே தனுஷிக்கிற்கும் அவருடைய காதலருக்கும் நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், இவர்களின் திருமணம் கூடிய விரைவில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. திருமணத்தை முன்னிட்டு, விஜய் தனுஷிக் இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு பதிலாக இனி இந்த தொடரில் நடிகை ஸ்வேதா, என்பவர் தான் அஞ்சலி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜே தனுஷிக் தொகுப்பாளராக பணியாற்றியதன் மூலம் பிரபலமானவர்:
சீரியல் நடிகை விஜே தனுஷிக், தமிழில் சில தொலைக்காட்சிகளில்... நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர். இலங்கையை சேர்ந்த இவர் ஸ்ரீலங்கன் தொலைக்காட்சிகள் தான் முதலில் பணியாற்றி வந்துள்ளார். இலங்கையில் தனக்கான வாய்ப்பு கிடைக்காத நிலையில், சில நண்பர்களின் துணையோடு சென்னை வந்தார். ஆனால் இவர் நம்பி வந்த நண்பர்கள் அனைவரும் இவரை கை விட, இலங்கையில் பணியாற்றிய தொலைக்காட்சியின் உரிமையாளர் தன்னுடைய தோழி மூலம் தனுஷிக் தங்க மற்றும் இன்னும் பிற உதவிகளை செய்துள்ளார்.
66
தற்காலிகமாக சீரியலில் இருந்து விலகுவதாக தகவல்:
தனுஷிக் கஷ்டப்பட்ட காலங்களில் கூட, தான் சம்பாதித்த பணத்தை இவருக்கு கொடுத்து ஊக்குவித்தது அந்த பெண் தானாம். எனவே தன்னுடைய முதல் சம்பளத்தை அந்த பெண்ணுக்காக தான் செலவு செய்ததாகவும், அந்த பெண் தன்னுடைய தோழிக்கு மேல்... என கூறி உருக்கமாக அவரை பற்றி பேசி இருந்தார். தற்போது தனுஷிக், திருமண வாழ்க்கைக்குள் நுழைய உள்ளதால்,தற்காலிகமாக சீரியலில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.