நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ், தன் அம்மாவை போலவே சினிமாவில் ஹீரோயினாக வலம் வருகிறார். ‘இது என்ன மாயம்’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான கீர்த்தி அடுத்தடுத்து விஜய், தனுஷ், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து டாப் ஹீரோயினாக உயர்ந்தார். கமர்ஷியல் படங்களில் மட்டும் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், மகாநடி என்கிற பயோபிக் படத்தில் நடித்தததால் அவரது கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
26
தேசிய விருது நாயகி கீர்த்தி சுரேஷ்
நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் மகாநடி திரைப்படம் உருவாக்கப்பட்டது. இப்படத்தில் சாவித்ரியாகவே வாழ்ந்த நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்ததும். தேசிய விருது வென்றதும் கமர்ஷியல் படங்களுக்கு டாடா காட்டைவிட்டு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடிக்க ஆரம்பித்தார் கீர்த்தி. ஆனால் அவரின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
36
கீர்த்தியின் பாலிவுட் எண்ட்ரி
பின்னர் மாமன்னன் படம் மூலம் கம்பேக் கொடுத்த கீர்த்தி சுரேஷ், தன்னுடைய நண்பன் அட்லீ மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். இந்தியில் நடிகர் விஜய் நடித்த தெறி படம் பேபி ஜான் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் நாயகியாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். வருண் தவானுக்கு ஜோடியாக அவர் நடித்த இப்படம் பாலிவுட்டில் படுதோல்வியை சந்தித்தது.
பாலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்த கையோடு திருமணமும் செய்துகொண்டார் கீர்த்தி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோவாவில் கீர்த்தியின் திருமணம் நடைபெற்றது. அங்கு தன்னுடைய நீண்ட நாள் காதலனான ஆண்டனி தட்டிலை கரம்பிடித்தார் கீர்த்தி. திருமணத்துக்கு பின்னர் தான் பங்கேற்கும் விழாக்களில் கழுத்தில் மஞ்சள் கயிறோடு வந்து கலந்துகொண்டார் கீர்த்தி சுரேஷ்.
56
அக்காவாக மாறிய கீர்த்தி சுரேஷ்
திருமணத்துக்கு பின் அவர் சினிமாவை விட்டு விலக உள்ளதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தான் நடித்த இரண்டாவது பாலிவுட் படமான அக்கா படத்தின் டீசரை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். சரித்திர கதையம்சம் கொண்ட அப்படத்தில் கழுத்தில் வித்தியாசமான தங்க ஆபரணத்துடன் நடித்திருக்கிறார் கீர்த்தி.
66
அக்கா டீசர் லாஞ்சில் கீர்த்தி சுரேஷ்
அக்கா படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷின் கழுத்தில் தாலி இன்றி வந்திருந்ததை பார்த்த ரசிகர்கள் அதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அந்த டீசரை பார்த்த பின்னர் கீர்த்தியை அக்கா என்று தான் பெரும்பாலான ரசிகர்கள் அழைக்கிறார்கள். அந்த அளவு ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது அக்கா டீசர்.