God of Love புதிய போஸ்டருடன் வெளியான சிம்புவின் 51-ஆவது பட அப்டேட்! இயக்குனர் யார் தெரியுமா?

Published : Feb 03, 2025, 06:55 PM ISTUpdated : Feb 03, 2025, 07:16 PM IST

நடிகர் சிம்பு இன்று தன்னுடைய 42-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவர் நடிக்கும் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்ஸ் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய போஸ்டருடன் சிம்புவின் 51-ஆவது படம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.  

PREV
15
God of Love புதிய போஸ்டருடன் வெளியான சிம்புவின் 51-ஆவது பட அப்டேட்! இயக்குனர் யார் தெரியுமா?
42-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் சிம்பு:

பன்முக திறமையாளரான டி ராஜேந்தரின் மகனான சிம்பு, தன்னுடைய தந்தை இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தன்னுடைய திறமையால் முன்னணி ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார். நடிகர் சிம்பு தன்னுடைய ஒரு வயதிலேயே சினிமாவில் அறிமுகமாகி விட்டதால், இவர் திரையுலகில் அறிமுகமாகி 40 வருடங்களுக்கு மேல் ஆகிறது.

25
சிம்புவின் 49-வது படத்தின் அப்டேட்

இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,சிம்பு நடிக்கும் மூன்று படங்களின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி உள்ளன. அந்த வகையில் சிம்புவின் 49-வது படத்தின் அப்டேட் நள்ளிரவு 12 மணி அளவில் வெளியானது. இந்த படத்தை பார்க்கிங் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார் இயக்குனர் ராம்குமார் இயக்க உள்ளார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'பராசக்தி' படத்தை தயாரித்து வரும் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் போஸ்டரில் நடிகர் சிம்பு கையில் இன்ஜினியரிங் படிக்கும் பாடப்புத்தகத்தை வைத்துக்கொண்டு நடுவே ரத்தக்கறை படித்த கத்தியை மடித்து வைத்திருப்பது போல் இருந்தது.

கோலிவுட்டின் பாகுபலியாக மாறும் சிம்பு; STR 50 படத்தின் அடிபொலி அப்டேட் வந்தாச்சு!

35
சிம்புவின் 50-ஆவது படம்:

இதை தொடர்ந்து நடிகர் சிம்புவின் 50-ஆவது படம் குறித்த தகவல் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார்.  ஏற்கனவே சிம்பு - தேசிங்கு பெரியசாமி இணையும் திரைப்படத்தை கமல் ஹாசன் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அந்த படம் கைவிடப்பட்டதாக  கூறப்பட்ட நிலையில், தற்போது நடிகர் சிம்புவே ATMAN சினிமா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்த படத்தை தயாரித்து நடிக்க உள்ளதை உறுதி செய்துள்ளார். இந்த படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளார்.

45
God of love என்கிற வாசம் மற்றும் சிம்புவின் வித்தியாசமான தோற்றம் :

இடைத்தொடர்ந்து தற்போது சிம்புவின் 51 வது திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தி இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்க உள்ளார். AGS நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. தற்போது இதுகுறித்த போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அதில் God of love என்கிற வாசம் மற்றும் சிம்புவின் வித்தியாசமான தோற்றமும் இடம்பெற்றுள்ளது. அதே போல் படக்குழுவினர் காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை… மீறி அவன் பூமி வந்தால்…? என கேள்வி எழுப்பும் விதத்தில் கேப்ஷனுடன் வெளியிட்டுள்ளனர். எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ரஜினியின் செண்டிமெண்ட்; அதே நாளையே 'கூலி' ரிலீசுக்கு முடிவு பண்ணிய சன் பிச்சர்ஸ்!

55
அஸ்வந்த் மாரிமுத்து இயக்கும் STR 51 திரைப்படம்

இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து 2020-ஆம் ஆண்டு,  அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஓ மை கடவுளே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். தற்போது பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள 'டிராகன்' படத்தை இயக்கி முடித்துள்ளார். இதை தொடர்ந்து சிம்புவை வைத்து இயக்க உள்ளார். AGS நிறுவனம் இந்த படத்தை தன்னுடைய 27-ஆவது படமாக தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories