STR 51 படத்துக்காக கடவுளாக மாறும் சிம்பு! God Of Love படத்தின் கதை இதுதானா?

Published : Feb 04, 2025, 09:02 AM IST

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் சிம்பு நாயகனாக நடிக்க உள்ள God Of Love படத்தின் கதைச்சுருக்கம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
STR 51 படத்துக்காக கடவுளாக மாறும் சிம்பு! God Of Love படத்தின் கதை இதுதானா?
கடவுளாக நடிக்கும் சிம்பு

நடிகர் சிம்பு நடிப்பில் 2024-ம் ஆண்டு ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை என கவலையுடன் இருந்த ரசிகர்களுக்கு தற்போது அடுத்தடுத்து 4 படங்களின் அப்டேட்டுகளை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சிம்பு. சிம்புவின் பிறந்தநாளன்று அவர் நடிக்கும் நான்கு படங்களின் அப்டேட் அடுத்தடுத்து வெளியிடப்பட்டது. 

25
ராம் குமார் இயக்கத்தில் சிம்பு

அதன்படி சிம்புவின் 48-வது படமான தக் லைஃப் படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டது. பின்னர் சிம்புவின் 49வது படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம் குமார் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

35
சிம்புவின் 50வது படம்

அதேபோல் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டு இருந்த சிம்பு - தேசிங்கு பெரியசாமி கூட்டணியில் உருவாகும் படத்தின் அப்டேட் வெளியிடப்பட்டது. அதன்படி அப்படம் நடிகர் சிம்புவின் 50வது படமாக உருவாக உள்ளதாக அறிவித்த படக்குழு, அப்படத்தின் மூலம் நடிகர் சிம்பு தயாரிப்பாளராக அறிமுகம் ஆவதையும் உறுதிப்படுத்தியது. அவரின் ஆத்மன் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தான் எஸ்.டி.ஆர் 50 திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

இதையும் படியுங்கள்... கோலிவுட்டின் பாகுபலியாக மாறும் சிம்பு; STR 50 படத்தின் அடிபொலி அப்டேட் வந்தாச்சு!

45
சிம்புவின் காட் ஆஃப் லவ்

இதன்பின்னர் சிம்புவின் 51வது படம் குறித்த அப்டேட் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இப்படத்தை ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தான் இயக்க உள்ளார் என்கிற தகவல் ஏற்கனவே வெளியான நிலையில், அப்படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி அப்படத்திற்கு God Of Love என பெயரிடப்பட்டு உள்ளதாக படக்குழு அறிவித்து அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு இருந்தது.

55
காட் ஆஃப் லவ் படத்தின் கதை

அதுமட்டுமின்றி இந்த படத்தின் கதைச் சுருக்கத்தையும் இயக்குனர் அஸ்வத் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார். அதன்படி ‘காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை… மீறி அவன் பூமி வந்தால் என்ன நடக்கும் என்பது தான் இப்படத்தின் கதைச்சுருக்கம். இதன்மூலம் சிம்பு இப்படத்தில் கடவுளாக நடிப்பது உறுதியாகி உள்ளது. ஓ மை கடவுளே பட பாணியில் இதுவும் ஒரு ஃபேண்டஸி கதையம்சம் கொண்ட படமாக உருவாக உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்... God of Love புதிய போஸ்டருடன் வெளியான சிம்புவின் 51-ஆவது பட அப்டேட்! இயக்குனர் யார் தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories