'களவாணி ' படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் விமல். இந்த படத்திற்கு முன் கில்லி, கிரீடம், குருவி, பந்தயம், காஞ்சிவரம் போன்ற படங்களில் விமல் நடித்திருந்தாலும் 'பசங்க' மற்றும் 'களவாணி' படங்கள் தான் விமலின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.
இதன் பின்னர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து, காமெடி கலாட்டாவாக வெளியான 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' திரைப்படம், தரமான வெற்றியை திரையுலகில் பதிவு செய்தது. பின்னர் சிவா உடன் இணைந்து விமல் நடித்த கலகலப்பு திரைப்படம், காமெடி அட்ராசிட்டி என புகழும் விதத்தில் இருந்தது.