Karthigai Deepam Season 2 Today january 28 Episode : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் தொடர்களில் ஒன்று தான் கார்த்திகை தீபம். குடும்ப கதையை மையப்படுத்திய இந்த தொடரானது முதல் முறையாக கடந்த 2022 அம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், கார்த்திக் ராஜ், மீரா கிருஷ்ணன், மது மோகன், ராஜேஷ், விசித்ரா, ராஜேஷ், நந்திதா ஜெனிஃபர், மோகன் ராமன் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். மேலும், விஜயகுமார், வடிவுக்கரசி, வனிதா விஜயகுமார், அம்பிகா ஆகியோர் பலர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். இந்த தொடருக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.
இதன் காரணமாக இந்த தொடரானது கிட்டத்தட்ட 700 எபிசோடுகள் வரை சென்றது. கடைசியாக கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதியுடன் இந்த தொடர் முடிவு பெற்றது. இதையடுத்து ஓரிரு நாட்களிலேயே இந்த தொடரின் 2ஆவது சீரிஸ் வெற்றிகரமாக தொடங்கப்பட்டது. இதிலும் கார்த்திக் ராஜ், ரேஷ்மா பசுபுலேட்டி, விஜயகுமார், வடிவுக்கரசி, மீரா கிருஷ்ணன், ராமசந்திரன் மகாலிங்கம், தனலட்சுமி சிவா, பவானி சௌத்ரி, வைஷ்ணவி சதீஷ் (ரேவதி), அஸ்வந்த் திலக் (மகேஷ்) ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.
இந்த தொடரில் இப்போது சாமுண்டீஸ்வரியாக வரும் ரேஷ்மாவின் 2ஆவது மகளான ரேவதிக்கு திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது காதல் திருமணம். ரேவதியும், மகேஷ் இருவரும் காதலித்து வருகின்றனர். ஆனால் ஒரே வீட்டில் இருக்கும் மகேஷிற்கு அவரது அண்ணியான மாயாவுடன் பழக்கம் ஏற்பட்டு அவர் கர்ப்பமாகிறார்.
அதனை கலைக்க மருத்துவரிடம் செல்ல, அவரோ சாமூண்டீஸ்வரிக்கு தோழி. எப்படியோ கருவை கலைத்து விடுகிறார். ஆனால், அதன் பிறகு ரேவதிக்கும், மகேஷிற்கும் இடையில் நடக்கும் நிச்சயதார்த்தம் முதல் முகூர்த்த கால் ஊன்றும் விழா வரை மருத்துவரை வரவிடாமல் தடுக்க தன்னால் என்ன செய்ய முடியுமோ எல்லாவற்றையும் செய்து விடுகிறார்.

இது எப்படியோ சாமூண்டீஸ்வரி வீட்டு கார் டிரைவரான கார்த்திக்கிற்கு தெரிய வருகிறது. அதன் பிறகு கார்த்திக் மற்றும் சாமூண்டீஸிவரியின் மூத்த மருமகன் இருவரும் சேர்ந்து மாயாவையும் அவரது கர்ப்பத்திற்கு காரணமானவரை பிடிக்க திட்டம் போடுகிறார்கள். இதனால் மாயா மற்றும் மகேஷ் தொடர்பான வீடியோ மற்றும் போட்டோ தன்னிடம் இருப்பதாகவும், அதை கொடுக்க வேண்டுமென்றால் ரூ.1 லட்சம் தர வேண்டும் என்றும் மயில்வாகனம் மாயாவிடம் போனில் பேசுகிறார்.
இதைத் தொடர்ந்து மயில்வாகனம் சொன்ன இடத்திற்கு மாயா, மகேஷுடன் செல்கிறார். மயில்வாகனனும், கார்த்திக்கும் ரெடியாக இருக்க, அங்கு முகத்தில் மங்கி கேப் அணிந்து வந்த மகேஷை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். அதன் பிறகு அங்கிருந்து தப்பிக்க மாயா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், மயில்வாகனத்தை முதுகில் குத்துகிறார். வலியால் துடித்த மயில்வாகனத்தை கார்த்திக் மருத்துவமனையில் சேர்க்கிறார். அதோடு இன்றைய எபிசோடும் முடிவடைகிறது.