எடிட்டர் மோகனின் மகனான ரவி, ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்டு வந்தார். 30 படங்களுக்கு மேல் நடித்த பின்னர் தன்னுடைய பெயரை அண்மையில் மாற்றினார் ஜெயம் ரவி. இனி தன்னை ரவி மோகன் என்றே அழைக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். தொடர் படங்களின் தோல்வி மற்றும் விவாகரத்து என அடிமேல் அடி விழுவதால் அவர் தன் பெயரை மாற்றி இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.
24
ஜெயம் ரவி பெயர் மாற்றம்
ஜெயம் ரவிக்கு கடந்த ஆண்டு வெளிவந்த சைரன், பிரதர் ஆகிய இரண்டு படங்களும் தோல்வியை சந்தித்தன. இதையடுத்து பெயரை மாற்றிய பின் அவருக்கு இந்த ஆண்டு முதல் படமே வெற்றி கிடைத்தது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் அவர் நடித்த காதலிக்க நேரமில்லை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. காதலிக்க நேரமில்லை படத்தின் வெற்றியை தொடர்ந்து ரவி மோகன் நடித்த ஜீனி திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அப்படம் வருகிற மார்ச் மாதம் திரைக்கு வர வாய்ப்புள்ளது.
இதுதவிர பராசக்தி திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகவும் நடித்து வருகிறார் ரவி மோகன். இப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் கைவசம் மற்றொரு திரைப்படம் உள்ளது. அப்படத்தை டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் கமிட்டாகி இருந்தார். இந்நிலையில், அவர் இப்படத்தில் இருந்து திடீரென விலகி இருக்கிறார். அவருக்கு பதில் வேறு இசையமைப்பாளரை கமிட் செய்துள்ளனர்.
44
ஹாரிஸுக்கு பதில் சாம் சி.எஸ்
அதன்படி ரவி மோகனின் 34வது படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளாராம். ரவி மோகன் நடித்த எங்கேயும் காதல், வனமகன், பிரதர் போன்ற படங்களுக்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது திடீரென இப்படத்தில் இருந்து விலகியதற்காக காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதேபோல் சாம் சி.எஸ் அண்மையில் புஷ்பா 2 படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் விலகியதை அடுத்து அப்படத்திற்கு பின்னணி இசைப் பணிகளை முடித்துக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.