கோலிவுட் போர் அடித்துவிட்டதா? தமிழ் இயக்குனர்கள் பாலிவுட்டுக்கு படையெடுப்பதன் பின்னணி என்ன?

Published : Jan 28, 2025, 01:27 PM ISTUpdated : Jan 28, 2025, 01:29 PM IST

அட்லீயை தொடர்ந்து மேலும் நான்கு தமிழ் சினிமா இயக்குனர்கள் பாலிவுட்டுக்கு படையெடுத்துள்ளனர். அவர்கள் யார்.. யார் என்பதை பற்றி பார்க்கலாம்.

PREV
16
கோலிவுட் போர் அடித்துவிட்டதா? தமிழ் இயக்குனர்கள் பாலிவுட்டுக்கு படையெடுப்பதன் பின்னணி என்ன?
பாலிவுட்டுக்கு படையெடுக்கும் கோலிவுட் இயக்குனர்கள்

தமிழ் சினிமாவில் திறமைவாய்ந்த இயக்குனர்களை உற்று நோக்கி வரும் பாலிவுட் நடிகர்கள் அவர்களை அலேக்காக தூக்கிச் செல்வது தொடர்கதை ஆகி வருகிறது. ஏற்கனவே பிரபுதேவா, ஏ.ஆர்.முருகதாஸ், விஷ்ணுவர்தன் ஆகியோர் பாலிவுட் சென்று தங்கள் திறமையை நிரூபித்த நிலையில், தற்போது அடுத்து ஒரு கோலிவுட் இயக்குனர் படையே பாலிவுட் படங்களை இயக்க தயாராகி வருகின்றனர். அவர்கள் பாலிவுட் படங்களை இயக்க ஆர்வம் காட்டுவதற்கு முக்கிய காரணம் சம்பளம் தான். கோலிவுட்டில் வாங்குவதை விட பல மடங்கு அதிக சம்பளம் பாலிவுட் படங்களை இயக்கினால் வழங்கப்படுகிறது. அதனால் தற்போது பாலிவுட்டில் அறிமுகமாக உள்ள தமிழ் இயக்குனர்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

26
அட்லீ

அட்லீ ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி அங்கு மோஸ்ட் வாண்டட் இயக்குனராக உருவெடுத்துள்ளார். அவர் இயக்கிய முதல் படமே 1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்ததால், தற்போது அடுத்ததும் பாலிவுட் படத்தை தான் இயக்க உள்ளார். அப்படத்தில் சல்மான் கான் நாயகனாக நடிக்க உள்ளார். அப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

36
லோகேஷ் கனகராஜ்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்த பின் கைதி 2, ரோலெக்ஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள அவர், பாலிவுட்டில் அமீர்கானை வைத்து ஒரு படத்டதை இயக்க உள்ளார்.

இதையும் படியுங்கள்... தனுஷ் வழக்கை நிராகரிக்க முடியாது; நெட்பிளிக்ஸிற்கு குட்டு வைத்த ஐகோர்ட்

46
ராஜ்குமார் பெரியசாமி

சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தை இயக்கி தேசிய அளவில் கவனம் ஈர்த்தவர் ராஜ்குமார் பெரியசாமி. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அவர் இந்தியில் ஒரு படத்தை இயக்க உள்ளார். அப்படத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

56
அருண் மாதேஸ்வரன்

தமிழில் ராக்கி, சாணிக் காயிதம், தனுஷின் கேப்டன் மில்லர் போன்ற படங்களை இயக்கியவர் அருண் மாதேஸ்வரன். தற்போது இளையராஜா பயோபிக்கை இயக்கி வரும் அவர், அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்க கமிட்டாகி உள்ளார். அப்படத்தின் அப்டேட் விரைவில் வெளிவர உள்ளது.

66
த.செ.ஞானவேல்

ஜெய் பீம் படத்தின் மூலம் பெயரையும் புகழையும் பெற்றவர் த.செ.ஞானவேல். இதையடுத்து ரஜினியை வைத்து இவர் இயக்கிய வேட்டையன் படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்த இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டில் தோசா கிங் என்கிற படத்தை இயக்க உள்ளார் ஞானவேல். இது சரவண பவன் ராஜகோபாலின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக உள்ளது.

இதையும் படியுங்கள்...  துரத்திவிட்ட பெற்றோர்; கணவரின் துரோகத்தால் கைக்குழந்தையுடன் பரிதவித்த மனோரமா!

Read more Photos on
click me!

Recommended Stories