காலம் மாறிவிட்டது; ஆண்கள் தான் பெண்களால் கொடுமைகளை அனுபவிக்கிறார்கள்: ரேகா நாயர்!

Published : Jan 28, 2025, 11:37 AM IST

Rekha Nair Talking About Men : நடிகை ரேகா நாயர் அளித்த பேட்டி ஒன்றில் ஆண்களுக்கு ஆதரவாக பேசியிருப்பது பெண்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
14
காலம் மாறிவிட்டது; ஆண்கள் தான் பெண்களால் கொடுமைகளை அனுபவிக்கிறார்கள்: ரேகா நாயர்!
Rekha Nair Talking About Men

Rekha Nair Talking About Men : இரவின் நிழல் படம் மூலமாக அதிகளவில் பிரபலமானவர் நடிகை ரேகா நாயர். விளம்பரம் என்ற படத்திலும் நடித்திருக்கிறார். தைரியமான நடிகை, எதையும் துணிச்சலாக எதிர்கொள்ளக் கூடியவர் தான் ரேகா நாயர். இரவில் நிழல் படத்திற்கு பிறகு பயில்வான் ரங்கநாதன் உடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ஆண்கள் ரொம்பவே பாவம், இன்று காலம் மாறிவிட்டது.

24
Rekha Nair Support Men

பெண்கள் தான் இப்போதெல்லாம் கொடுமைப்படுத்துகிறார்கள். பெண்கள் சொல்வதைத் தான் எங்கும் கேட்கிறார்கள். காவல் நிலையம் சென்று ஆணுக்கு எதிராக புகார் கொடுத்தால் உடனே எடுக்கிறார்கள். ஆனால், உண்மையை மட்டும் அறிந்து கொள்ள மாட்டார்கள். ஆண்களுக்கான குறையை கேட்க யாருமே கேட்கமாட்டார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் கோர்ட்டுக்கு சென்றுவிட்டால் அங்கேயும் பெண்களுக்கு தான் சாதமாக பேசுவார்கள். பெண்கள் யார் கூடவும் வெளியில் சுற்றலாம், சினிமா, பார்க், பீச் என்று இருக்கலாம்.

34
Rekha Nair Interview

ஆனால், ரேகா நாயரின் இந்த வீடியோவிற்கு பலரும் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இன்னும் ஆண்களால் பெண்கள் கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள் என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். சினிமாவில் மட்டுமின்றி ஆண்டாள் அழகர், நாம் இருவர் நமக்கு இருவர் வம்சம், பகல் நிலவு, பால கணபதி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

44
Actress Rekha Nair

இரவில் நிழல் படத்தின் போது அரை நிர்வாணமாக நடித்திருந்தார். அவரது கதாபாத்திரம் இந்த படத்தில் பெரிதாக பேசப்பட்டது. ஆனால், சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய யூடியூப் சேனலில் ரேகா நாயர் பற்றி அவதூராக பேசியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த நடிகை ரேகா, பயில்வான் ரங்கநாதன் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories