சுந்தர் சி வைத்து பார்ட்டி
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான 'மதகஜராஜா' திரைப்படம் எடுக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பின் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியையும் சுந்தர் சியின் பிறந்தநாளையும் பார்ட்டி வைத்து கொண்டாடினார் குஷ்பூ. இந்த பார்ட்டியில் மீனா, கே எஸ் ரவிக்குமார், திவ்யதர்ஷினி, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, என்று பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பயில்வான் ரங்கநாதன் கருத்து:
மேலும் இந்த பார்ட்டியில் விஷால் குடித்து போதையில் இருந்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தான் இது குறித்து சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
மதகஜராஜா:
இது ஒருவரைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக இருக்கும். இதன் மூலமாக ஒருவருக்கொருவர் நண்பர்களாக பழகி அதன் பிறகு லவ்வர்ஸ் ஆக மாறுகிறார்கள். அப்படி தான் மதகஜராஜா படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி நடை போட்டது.
இது அன்பின் அடையாளம் தான்:
உண்மையில் இது காலம் காலமாக சினிமாவில் இருக்கும் ஒரு பழக்கம் தான். திருமணம், ரிஷப்ஷன், பிறந்தநாள் என்று எந்த பார்ட்டியாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடிப்பது வழக்கமான ஒன்று. இதில் எந்த தவறுமில்லை. இது அன்பின் அடையாளம் தான்.
விஷால் போதையில் இருந்தாரா?
பார்ட்டியில் விஷால் போதையில் இருந்ததாக செய்தி வெளியானது. ஆனால், இப்போது தான் விஷால் கொஞ்சம் கொஞ்சமாக காய்ச்சலிலிருந்து குணமடைந்து வருகிறார். அப்படியிருக்கும் போது எப்படி குடித்திருப்பார். விஷால் தனது புதிய படத்தின் கதை விவாதத்தில் இருக்கிறார் என்று அவரை பற்றிய உண்மைகளை உடைத்து பேசியுள்ளார்.
திருமண தேதியை அறிவித்த விஜய் டிவி சீரியல் நடிகர்கள்!