விக்ரம் , நாயகிகள் மேற்கொண்ட உள்நாட்டு பயணம் கூட நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் படம் தோல்வியை சந்தித்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது. படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. கோப்ரா படம் சோனி லைவ் ஓடிடியில் வரும் செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது.