பிரசாந்த் நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு ரிலீசான சாக்லேட் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கூல் சுரேஷ். ஆரம்பத்தில் சின்ன சின்ன நெகடிவ் ரோல்களில் நடித்து வந்த இவர், நாளடைவில் காமெடி நடிகராக மாறினார். தொடர்ந்து சிம்பு மற்றும் சந்தானம் ஆகியோர் கூல் சுரேஷுக்கு வாய்ப்பு கொடுத்து வந்தனர்.
அதோடு சிம்புவின் தீவிர ரசிகனான இவர், வெந்து தணிந்தது காடு படத்தை கடந்த சில மாதங்களாகவே புரமோட் செய்து வருகிறார். ஒவ்வொரு படம் பார்க்க வரும் போது வெந்து தணிந்தது காடு... வணக்கத்த போடு என இவர் சொல்லும் டயலாக் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனது. சமீபத்தில் அப்படம் ரிலீசானபோது கூட ரசிகர்கள் இவருக்கு கொடுத்த வரவேற்பு முன்னணி நடிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியது.