பண்டிகை தினங்கள் என்றாலே கொண்டாட்டங்களுக்கு பஞ்சம் இருக்காது. குறிப்பாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளில் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாவது வழக்கம். அதுமட்டுமின்றி அப்போது வெளியாகும் படங்களுக்கென தனி மவுசும் உண்டு.
வழக்கமாக தீபாவளி என்றால் அஜித், விஜய், சூர்யா, ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ஏதாவது ஒன்று நிச்சயம் ரிலீசாகும். ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு மேற்கண்ட நடிகர்களின் படங்கள் ஒன்று கூட ரிலீசாகவில்லை. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாக உள்ள படங்களைப் பற்றி பார்க்கலாம்.
சர்தார்
கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படமும் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ராஷி கண்ணா மற்றும் ரெஜிஷா விஜயன் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.
இறைவன்
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள படம் இறைவன். அஹ்மத் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படமும் தீபாவளிக்கு ரிலீசாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அதுகுறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அப்டேட்டும் வெளியாகவில்லை.
இதையும் படியுங்கள்... மீடூ புகார் கொடுத்ததால் விஷம் வச்சு கொல்லப்பாத்தாங்க... விஷால் பட நடிகை பகீர் புகார்