பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர் தமிழில் திரு இயக்கிய தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் தனுஸ்ரீ. இதன்பின் பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வரும் இவர், வில்லன் நடிகர் நானா படேகர் மீது மீடூ புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவர் கூறிய புகாருக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் கோர்ட்டில் வழக்கு முடித்துவைக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து அதுகுறித்து குரல் எழுப்பி வருகிறார் தனுஸ்ரீ. சமீபத்திய பேட்டி ஒன்றில், தான் மீடூ புகார் கூறிய பின்னர் தன்னை கொலை செய்ய பலமுறை முயற்சிகள் நடந்ததாக அவர் கூறியுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... அமைச்சரை தொடர்ந்து காமெடி நடிகர் போண்டா மணிக்கு உதவிக்கரம் நீட்டிய பார்த்திபன்..
அதன்படி அவர் காரில் செல்லும்போது பலமுறை பிரேக் சேதமடைந்து இருப்பதாகவும், சமீபத்தில் உஜ்ஜயினியில் உள்ள கோவிலுக்கு ஆன்மீக பயணம் சென்றபோது, பிரேக் செயலிழந்ததால் தான் விபத்தில் சிக்கியதாகவும், இது யாரோ செய்த சதி என்றும் அவர் குற்றம்சாட்டி இருந்தார். அதுமட்டுமின்றி அவரை விஷம் வைத்து கொள்ளவும் முயற்சிகள் நடந்ததாக கூறி உள்ளார்.