அதன் போது, இன்று துருவ் விக்ரமின் பிறந்த நாள் என்பதை அறிந்த கல்லூரி மாணவிகள், கேக் வெட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து மாணவிகளின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் இசையில் வெளியான 'மனசே..' என்ற சுயாதீன இசை ஆல்பம் பாடலை பாடினார். பாடி முடித்ததும் மாணவிகள் கை தட்டி அவரை பாராட்டினர்.