தமிழ் சினிமாவில், ஒரு காலத்தில் கோவில் கட்டி கொண்டாடப்பட்ட நடிகை என்கிற அந்தஸ்தை பெற்றவர் குஷ்பு. 80 மற்றும் 90 களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி... உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு பட வாய்ப்புகள் குறைய துவங்கிய பின்னர், பிரபல இயக்குனர் சுந்தர்.சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.