தன்னுடைய 17 வயதிலேயே மலையாளதில் வெளியான 'நீலதாமரா' என்கிற படத்தில் அறிமுகமான அமலா பாலுக்கு, கை கொடுத்து தூக்கி விட்டது என்றால் அது தமிழில் வெளியான திரைப்படங்கள் தான்.
இதை தொடர்ந்து அமலா பால் நடித்த 'மைனா' திரைப்படம் இவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்திற்கு பின்னர் கதை மற்றும் கதாபாத்திரங்களில் அதிகம் கவனம் செலுத்த துவங்கிய அமலா பால், ஒரு கட்டத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்தார்.
தலைவா படத்தில் நடித்து முடித்த பின்னர், இந்த படத்தின் இயக்குனரான ஏ.எல்.விஜய்யை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நன்றாக சென்று கொண்டிருந்த திருமண வாழ்க்கையில் திடீர் என அமலா பால் மீண்டும் திரைப்படங்கள் நடிக்க துவங்கிய பின்னர் பிரச்சனைகளும் வந்தது. இதே அவரது வாழ்க்கையில் பூதமாய் வெடிக்க இருவரும் 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
மேலும் செய்திகள்: 'நானே வருவேன்' என்னுடைய கதை அல்ல..! அப்போ யாருடையது? ஆச்சர்ய தகவலை வெளியிட்ட செல்வராகவன்!
விவாகரத்துக்கு பின்னர் தன்னை சுதந்திர பறவையாக நினைத்து கொண்டு, கண்டமேனிக்கு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து வரும், அமலா பால்... நடிகை என்பதை தாண்டி சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான 'கடவார்' என்கிற படத்தை தயாரித்தும் இருந்தார்.