மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் தடபுடலாக தயாராகி உள்ளது. இந்த படம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.
26
ponniyin selvan
ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார் பிரபு, ஜெயராம் உள்ளிட்ட மல்டி ஸ்டார் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவாகியுள்ளது.
சோழ வம்ச வரலாற்றை மையமாக கொண்ட இந்த படத்தில் நம்ம ஊர் நாயகர்களின் வேடங்களைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
46
ponniyin selvan
முன்னதாக டீசர் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த ட்ரைலர் வெளியீட்டு விழாவில் உலகநாயகன் முதல் ரஜினிகாந்த் வரை பலரும் கலந்து கொண்டனர். அவர்களது மேடைப்பேச்சும் வைரலானது.
படம் திரைக்கு வர இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் படக்குழுவினர். இந்தியா முழுவதும் படம் குறித்த பிரமோசனை மேற்கொள்ள பயணம் மேற்கொண்டுள்ளனர்.
66
ponniyin selvan
அந்த வகையில் பொன்னியின் செல்வன் வெற்றி பெற ஜெயராம் மற்றும் ஜெயம் ரவி இருவரும் பொன்னியின் செல்வன் சபரி யாத்திரை சென்று ஐயப்பனை தரிசனம் செய்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.