50 வயதை குறைத்து காட்ட நடிகை தபு பயன்படுத்திய க்ரீமின் விலை எவ்வளவு தெரியுமா?

Published : Sep 23, 2022, 07:29 PM ISTUpdated : Sep 23, 2022, 07:30 PM IST

நடிகை தபு ஆங்கில செய்தி இணையதளம் ஒன்றிற்கு பேட்டி அளித்த போது ரூ.50,000 ரூபாய்க்கு ஃபேஸ் க்ரீம் வாங்கியதாக கூறியுள்ளார்.  

PREV
15
50 வயதை குறைத்து காட்ட நடிகை தபு பயன்படுத்திய க்ரீமின் விலை எவ்வளவு தெரியுமா?
actress tabu actress tabu

ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்தவர் தபு. காதல் தேசம் என்னும் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான இவர் தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிநேகிதியே, டேவிட் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

25
actress tabu

 50 வயதுகளை கடந்து விட்ட தபோதும் படங்களில் தற்போது கமிட் ஆகி வருகிறார். இந்நிலையில் இவரது இளமை குறித்த கேள்வி சமூக ஊடகங்களில் எழுந்துள்ளது. அதற்கு பதில் அளித்துள்ள நடிகை தபு ஆங்கில செய்தி இணையதளம் ஒன்றிற்கு பேட்டி அளித்த போது ரூ.50,000 ரூபாய்க்கு ஃபேஸ் க்ரீம் வாங்கியதாக கூறியுள்ளார்.  

மேலும் செய்திகளுக்கு...நாங்க யாரோட வாரிசும் இல்லை..! தனியா துணிவோடு இருக்கும்.. விஜய் அஜித் ரசிகர்கள் போஸ்டர் யுத்தம்

35
actress tabu

அந்த பேட்டியில் தனது அழகின் ரகசியம் எதுவும் இல்லை என்று கூறியுள்ள தபு. சிலர் பெரும்பாலும் சில வீட்டு வைத்தியங்களை பரிந்துரைக்கிறார்கள்.  அப்படி செய்தால் சருமம் மிகவும் அழகாக இருப்பதாக தனது ஒப்பனை கலைஞர்கூறுகிறார். ஆனாலும் முகத்தில் காப்பி அல்லது சில தாவர அடிப்படையில் மேக்கப் மட்டும் போதாது கொஞ்சம் கிரீம் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். 

மேலும் செய்திகளுக்கு...திரையுலகில் பேரதிர்ச்சி..பிரபல இயக்குனர் காலமானார்...

45
actress tabu

ஒரு முறை யாரோ ஒருவரின் வேண்டுகோளின் பெயரில் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள கிரீமை ஆர்டர் செய்ததாகவும் ஆனால் அதை மீண்டும் வாங்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் தன் முகத்திற்காக நான் தொடர்ந்து எதுவும் செய்வதில்லை. ஆனால் எந்த வகையிலும் என்னால் சிறப்பாக இருக்க முடியும் என்பதை நான் அறிந்திருக்கிறேன். நான் வேண்டும் என்று அதைக் கெடுக்க விரும்பவில்லை ஆனால் எல்லோரும் அதைச் செய்கிறார்கள். 

55
actress tabu

எல்லோரும் அழகாக இருக்க வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் இதைத்தவிர மனதளவில் நன்றாக இருக்க வேண்டும். நானும் அதையே செய்ய முயற்சிக்கிறேன் என கூறியுள்ளார் . தபு தற்போது  அனீஸ் பாஸ்மியின் இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன் மற்றும் கியாரா அத்வானி நடித்த பூல் புலையா 2 -ல் நடித்துள்ளார். இந்த படம் மே மாதம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றிருந்தது.

click me!

Recommended Stories