நடிகர் தனுஷ் நடிப்பில், சமீபத்தில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம், ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவோடு, சுமார் 100 கோடி கிளப்பில் இணைந்தது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை படக்குழுவினரும் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். இந்த படத்தை தொடர்ந்து, தனுஷ் தன்னுடைய சகோதரர், செல்வராகவன் இயக்கத்தில் நடித்துள்ள 'நானே வருவேன்' திரைப்படம் செப்டம்பர் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் தாணு தயாரித்துள்ளார்.
சமீபத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில்... அக்ஷன் காட்சியில் மிரட்டிய டீசர் சமீபத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்திற்கு U /A சான்றிதழ் கிடைத்த தகவலை நேற்று படக்குழு தெரிவித்திருந்தது. ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தில் இந்துஜா, ஜெர்மன் நாட்டு நடிகை எல்லிஅவ்ர்ராம் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களை தவிர முக்கிய கதாபாத்திரத்தில், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மேலும் செய்திகள்: உன் முகம் மாறுவதைப் பார்ப்பது எப்போதுமே ஒரு கனவுதான்.. அம்மாவை கட்டிப்பிடித்து விக்கி வெளியிட்ட எமோஷனல் போட்டோ
செல்வராகவன் இந்த படத்தை இயக்கியுள்ளது மட்டும் இன்றி, சோமராஜன் என்கிற மிக முக்கிய ரோலில் நடித்தும் உள்ளார். இவரது கதாபாத்திரம் மிகுந்த எதிர்பார்ப்புக்குரியது என்றும் படத்தின் திருப்புமுனையை ஏற்படுத்த கூடிய கதாபாத்திரம் என கூறப்படுகிறது. ஏற்கனவே பீஸ்ட், சணிக்காகிதம் ஆகிய படங்களில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய செல்வராகவன் இந்த படத்தில் வேற லெவல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்பது இவரது வித்தியாசமான தோற்றத்தை பார்த்தாலே தெரிகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது இல்லை... என செல்வராகவன் கூறிய தகவல் வெளியாகியுள்ளது. தானும் தனுசும் அவ்வப்போது 'புதுப்பேட்டை 2 ' படத்தை இயக்குவது குறித்து பேசிக்கொண்டு இருப்போம். அதனால் இந்த படம் குறித்தே அதிகம் சிந்தித்துக்கொண்டு இருந்தேன். அப்போது தனுஷ் திடீர்னு ஒரு நாள் புதுக் கதையுடன் வந்தார், அவர் கூறிய கதை என்னை கவர்ந்தது, சவால் மிகுந்த கதையாவும் இருந்தது. இதனால், இந்த படத்தையே இயக்கலாம் என்று முடிவு எடுத்தோம், அப்படி எடுக்கப்பட்டது தான் நானே வருவேன். இந்த படத்தின் கதை தனுஷுடையது, இதையே திரைக்கதையாக்கி நான் இயக்கியுள்ளேன் என செல்வராகவன் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்: 'வெண்ணிலா கபடிக்குழு' நடிகரின் பரிதாப நிலை! 6 மாசம் தான் உயிருடன் இருப்பாரா? கண் கலங்க வைத்த பேட்டி!