நாங்க யாரோட வாரிசும் இல்லை..! தனியா துணிவோடு இருக்கும்.. விஜய் அஜித் ரசிகர்கள் போஸ்டர் யுத்தம்

Published : Sep 23, 2022, 05:37 PM ISTUpdated : Sep 23, 2022, 05:38 PM IST

இந்த கருத்து மோதல் தான் தற்போது சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகிறது. உண்மையில் அஜித்தும், விஜய்யும் நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
14
நாங்க யாரோட வாரிசும் இல்லை..! தனியா துணிவோடு இருக்கும்.. விஜய் அஜித் ரசிகர்கள் போஸ்டர் யுத்தம்
VARISU

காலம் காலமாக இரு பெரும் நடிகர்களின் ரசிகர்கள் மத்தியில் கருத்து மோதல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் தல அஜித், தளபதி விஜய் என இரு கூட்டம் பிரிந்து விமர்சனங்கள் மூலம் அவ்வப்போது தாக்கிக் கொள்வது வழக்கமாகிவிட்டது. அந்த வகைகளில் தற்போது விஜய் படத்தின் வாரிசுயையும், அஜித் படத்தின் துணிவையும் வைத்து இரு ரசிகர் கூட்டமும் போஸ்டர்கள் மூலம் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

விஜய் தற்போது நடித்து வரும் வாரிசு குடும்ப செண்டிமண்ட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது.  இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிகிறது. இதன் படப்பிடிப்பு விசாகப்பட்டினம், சென்னை, ஹைதராபாத் என தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...திரையுலகில் பேரதிர்ச்சி..பிரபல இயக்குனர் காலமானார்...

24
thunivu

அதேபோல தற்போது அஜித் தனது 61வது படத்திற்காக மீண்டும் எச்.வினோத்துடன் கைகோர்த்துள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் இரு வேறு தோற்றங்களில் அஜித் நடிப்பதாக கூறப்படுகிறது.  தற்போது இந்த படம் தாய்லாந்தில் படமாக்கப்பட்டு வருகிறது .இதில் மலையாள நாயகி மஞ்சுவாரியர் நாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது தான் வெளியாகியுள்ளது .இந்த படத்திற்கு துணிவு என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...உயிரை பணையம் வைத்த கண்ணம்மா...உருகிப்போன பாரதி.. இன்றைய முழு எபிசோட் இதோ

34
varisu

இந்நிலைகள் விஜய் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் நடிகர்களின் பட போஸ்டர்களை ஒட்டி மோதி வருகின்றனர். அதன்படி விஜய் ரசிகர்கள் "துணிவாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி ஃபர்ஸ்ட் தளபதி என்ட்ரி தான் என போஸ்டர் ஒட்டி இருந்தனர் மதுரை  விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள்.

44
varisu thunivu fans

இந்த செயலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அஜித் ரசிகர்கள் பல்வேறு மாவட்டங்களில் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது திருச்சியை சேர்ந்தஅஜித் ரசிகர் இயக்கத்தை சேர்ந்த ரசிகர்கள் "வரைமுறை இல்லாமல் வர நாங்கள் யாரோட வாரிசும் இல்ல தனியா துணிவோட இருக்கும் எங்களுக்கு எவரும் நிகர் இல்லை" என குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டி உள்ளனர். இந்த கருத்து மோதல் தான் தற்போது சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகிறது. உண்மையில் அஜித்தும், விஜய்யும் நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories