உன் முகம் மாறுவதைப் பார்ப்பது எப்போதுமே ஒரு கனவுதான்.. அம்மாவை கட்டிப்பிடித்து விக்கி வெளியிட்ட எமோஷனல் போட்டோ

Published : Sep 23, 2022, 04:27 PM IST

 விக்னேஷ் சிவன் அண்மையில் தன்னுடைய 38-ஆவது பிறந்தநாளை துபாயில் கொண்டாடிய நிலையில், பிறந்தநாளின் போது... விக்னேஷ் சிவன் தன்னுடைய அம்மாவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு, எமோஷ்னல் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.  

PREV
16
உன் முகம் மாறுவதைப் பார்ப்பது எப்போதுமே ஒரு கனவுதான்.. அம்மாவை கட்டிப்பிடித்து விக்கி வெளியிட்ட எமோஷனல் போட்டோ

கோலிவுட் திரையுலகின், லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும், நடிகை நயன்தாராவை... சுமார் 7 வருடங்களாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன், கடந்த ஜூலை முதல் பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்து கொண்டார்.

26

திரையுலகமே பிரமித்து பார்க்கும் அளவிற்கு இவர்களுடைய திருமணம் நடந்த நிலையில், இதில்... தென்னிந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் தங்களுடைய குடும்பத்துடன் கலந்து கொண்டு, இந்த ஜோடியை வாழ்த்தினர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் ஷாருகான், இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான், விஜய் சேதுபதி, சூர்யா போன்ற பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்: 'வெண்ணிலா கபடிக்குழு' நடிகரின் பரிதாப நிலை! 6 மாசம் தான் உயிருடன் இருப்பாரா? கண் கலங்க வைத்த பேட்டி!
 

36

திருமணத்திற்கு பின்னர் தாய்லாந்து நாட்டுக்கு ஹனி மூன் சென்ற இந்த தம்பதி, மீண்டும் திரையுலக பணியில் பிஸியான நிலையில்... சமீபத்தில் தான் இரண்டாவது ஹனி மூனுக்காக ஈரோப் நாடுகளுக்கு சென்று வந்தனர். இதை தொடர்ந்து நயன்தாரா தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை, துபாய் நாட்டில் கொண்டாடினார்.

46

ஏற்கனவே இதுகுறித்த புகைப்படங்களை இவர்கள் வெளியிட, ரசிகர்கள் தாறுமாறாக தங்களின் வாழ்த்துக்களை பொழிந்தனர். மேலும் குடும்பத்துடன், கேக் வெட்டி இந்த பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ ஒன்றையும், விக்னேஷ் சிவன் வெளியிட்டிருந்தார்.

மேலும் செய்திகள்: 'புஷ்பா 2' படத்தில் சமந்தா வாய்ப்பை தட்டி தூக்கிய 48 வயது கவர்ச்சி புயல்! காத்திருக்கும் கவர்ச்சி விருந்து!
 

56

இதை தொடர்ந்து தன்னுடைய அம்மாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு மிகவும் எமோஷ்னல் பதிவு ஒன்றை போட்டுள்ளார் விக்னேஷ் சிவன், இதில்.. அவர் கூறியுள்ளதாவது "என் அம்மாவை வெளியூர்களுக்கு அழைத்துச் செல்வதும், உயரமான கட்டிடங்கள், புதிய மனிதர்கள் மற்றும் புதிய விஷயங்களைப் அவர்  பார்க்கும் போது அவர் முகம் மாறுவதைப் பார்ப்பது எப்போதுமே எனக்கு ஒரு கனவுதான்.

66

 அவரின் முகத்தில் நான் தேடும் மகிழ்ச்சி நான் சாதனை செய்தது போன்ற உணர்வை தரும். இதுவே என்னுடைய கடின உழைப்புக்கும் அர்த்தம் தருகிறது! வாழ்க்கை எனக்கு வழங்கிய அனைத்து நல்ல விஷயங்களுக்கும் மேலாக செல்கிறது! இந்த சில நாட்களில் நீங்கள் நல்ல மற்றும் பெரிய விஷயங்களுக்காக வெளியே அறியப்படுகிறீர்கள்... இந்த ஆண்டு எனது பிறந்தநாளைச் சுற்றியுள்ள அன்பான தருணங்கள் ... துபாயில் என் குடும்பத்துடன் இருந்தது எப்போதுமே என் இதயத்தில் நீங்காமல் இருக்கும் என பதிவிட்டுள்ளார். அதே போல் தன்னுடைய விருப்பங்களை நிறைவேற்றிய கடவுளுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: அடிச்சு டார்ச்சர் பண்ணிய கணவர்... ஐட்டம் டான்ஸ் ஆட ரூ.50 ஆயிரம் - சோகங்கள் நிறைந்த சில்க் ஸ்மிதாவின் மறுபக்கம்
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories