நகைச்சுவை நடிகர் போண்டாமணியை தெரியாத ஆட்களே இருக்க முடியாது அந்த அளவிற்கு பிரபலமான நடிகர்களில் ஒருவரான போண்டா மணி தற்போது இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். வடிவேலு, விவேகே உள்ளிட்டோருடன் முக்கிய நகைச்சுவை காட்சிகளில் இடம் பிடித்திருந்த போண்டாமணி பெரும்பாலும் வடிவேலு உடன் நடித்திருந்த காட்சிகள் அனைத்தும் பார்ப்பவர்களின் பாராட்டுகளை பெற்றிருந்தது.
25
bonda mani
270 க்கும் மேற்பட்ட படங்களில் துணை மற்றும் நகைச்சுவை வேடங்கள் தரித்து இவர் நடித்துள்ளார். போண்டாமணி முன்னதாக இலங்கை சேர்ந்த கேதீஸ்வரன் 1980களில் சிங்கப்பூரில் பணிபுரிந்த போது ஒரு நிகழ்ச்சிக்காக அங்கு சென்றிருந்த இயக்குனர் கே பாக்யராஜ் உடம் இவருக்கு அறிமுகம் ஏற்பட்டது.
இதைத்தொடர் சென்னைக்கு திரும்பிய பாக்யராஜுடன் மீண்டும் இணைந்த கேதீஸ்வரன் பவுனு பவுனுதான் என்னும் படத்தின் மூலம் துணை நடிகராக அறிமுகமானார். பின்னர் தென்றல் வரும் தெருவில் என்னும் படத்தில் இவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
பின்னர் கேதீஸ்வரன் என்ற பெயரை கவுண்டமணி தான் போண்டாமணி என மாற்றியுள்ளார். அதிகமாக இவர் போண்டா சாப்பிடுவதால் இவருக்கு போண்டாமணி என பெயர் சூட்டியுள்ளார் கவுண்டமணி. இதைத்தொடர்ந்து இதுவே இவரது சினிமா பெயரானது.
தொடர்ந்து வடிவேலுவின் டீமை சேர்ந்த நடிகர் போண்டாமணி தொடர்ந்து பல நகைச்சுவை காட்சிகளில் நடித்து வந்தார். பின்னர் 2016 ஆம் ஆண்டு அஇஅதிமுகவில் இணைந்த போண்டாமணி ஜெயலலிதாவை சந்தித்த புகைப்படங்கள் அப்போது வைரல் ஆகி இருந்தது.
இந்நிலையில் மிகவும் மோசமான நிலையில் போண்டா மணி மருத்துவமனையில் இருப்பதாக தகவல் பரவியது. அதோடு காமெடி நடிகர் பெஞ்சமீனும் போண்டாமணிக்கு உதவி கோரி வீடியோ ஒன்றினை கண்ணீர் மல்க வெளியிட்டு இருந்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று நகைச்சுவை நடிகர் போண்டாமணியை நேரில் சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியம் அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் தமிழக அரசு இலவசமாக அளிக்கும் என பேட்டி அளித்திருந்தார்.
தற்போது போண்டா மணியை தொடர்பு கொண்டு பேசிய நடிகர் பார்த்திபன், அவரது குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தானே செய்வதாகவும், தனது மனிதநேய அறக்கட்டையின் மூலம் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
போண்டாமணிக்கு மாதவி என்ற மனைவியும், சாய் குமாரி, சாய்ராம் எனும் இரு பிள்ளைகளும் உள்ளனர். மாதவியும் மாற்றுத்திறனாளி ஆவார். அதோடு இவரது இரு பிள்ளைகளும் 12 மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறு பிள்ளைகளாக உள்ளனர். இந்நிலைகள் தொடர்ந்து இவருக்கு உதவி கிடைத்து வருவது பாராட்டுக்குள்ளாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.