80 மற்றும் 90களில், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் கௌதமி. தற்போது இவரது மகள், அம்மாவையே அழகில் மிஞ்சும் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
ஹிந்தி, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வந்த கெளதமி, ஒரு கட்டத்தில் தமிழ் படங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க துவங்கினர். அப்போதே நடிகர் கமல்ஹாசனின் காதல் சர்ச்சையில் சிக்கி பின்னர் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டிற்கு பறந்தார் கௌதமி.
இதை தொடர்ந்து சென்னை வந்த கௌதமி, மகள் வளர்ந்த பின்னர் சீரியல்களில் நடிக்க துவங்கினார். அதே போல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு, நடிகர் கமல்ஹாசன் ஆதரவு கொடுத்தார். பின்னர் இருவரும் சுமார் 10 வருடங்கள், லிவிங்டூ கெதர் வாழ்க்கை முறையில் இருந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய மகளின் எதிர்காலம் கருதி கமலை விட்டு பிரிவதாக அறிவித்தார்.
இவருடைய மகள் சுப்புலட்சுமியுடன் கௌதமி தனியாக வாழ்ந்து வரும் நிலையில், ஏற்கனவே சுப்புலட்சுமி திரையுலகில் நடிகையாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலை கௌதமி மறுத்துவந்தார்.