பிரியாணியை விரும்பும் புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுன்...அவரது மனைவி சொன்ன ரகசியம் இதோ !

Published : Sep 23, 2022, 07:51 PM ISTUpdated : Sep 23, 2022, 07:52 PM IST

அல்லு அர்ஜுனனின் மனைவி சினேகா ரெட்டியிடம் அல்லு அர்ஜுனுக்கு பிடித்த உணவு பற்றி கேட்டுள்ளனர். அதற்கு அவர் பிரியாணி என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

PREV
14
பிரியாணியை விரும்பும் புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுன்...அவரது மனைவி  சொன்ன ரகசியம் இதோ !

தெலுங்கு சூப்பர் ஹீரோவான அல்லு அர்ஜுன் சமீபத்தில் நடித்திருந்த புஷ்பா படம் உலக அளவில் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் ராஷ்மீகா மந்தனா கிராமத்து நாயகியாக வந்து அசத்தியிருந்தார். பிரபல இயக்குனர் சுகுமாரின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பாவில் செம்மரம் கடத்தும் ரோலில் நடித்திருந்தார் நாயகன்.

24

தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ப தன் உடலையும் மொழியையும் மாற்றி நடிப்பு திறமை மொத்தத்தையும் கொட்டி அனைத்து மொழி ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த அல்லு அர்ஜுன் குறித்த தகவல் ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...50 வயதை குறைத்து காட்ட நடிகை தபு பயன்படுத்திய க்ரீமின் விலை எவ்வளவு தெரியுமா?

முதல் பாகத்தை தொடர்ந்தது தற்போது அல்லு அர்ஜுன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.முதல் பாகத்தில் செம்மரம் வெட்டும் ஒரு நபர் கடத்தல் மன்னனாக மாறும் கதைக்களத்தை கொண்டிருந்த புஷ்பா தி ரைஸ் இரண்டாம் பாகத்தில் அந்த நாயகன் எவ்வாறு தனது இடத்தை தக்க வைத்துக் கொள்கிறான் தனது எதிரிகளை எவ்வாறு வீழ்த்துகிறான் என்பதை முக்கிய அங்கமாக கொண்டிருக்கும் என தெரிகிறது. பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

34

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய அல்லு அர்ஜுனனின் மனைவி சினேகா ரெட்டியிடம் அல்லு அர்ஜுனுக்கு பிடித்த உணவு பற்றி கேட்டுள்ளனர். அதற்கு அவர் பிரியாணி என்று வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும் பிரியாணி என்பது கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்தியருக்கும் பிடித்தமான உணவு இது ஹைதராபாத்தில் பூர்விக உணவு அங்கு அவர் தனது கனவு வீட்டை கட்டி உள்ளார் என மேலும் ஒரு தகவலையும் போட்டு உடைத்துள்ளார் சினேகா ரெட்டி.

மேலும் செய்திகளுக்கு...நாங்க யாரோட வாரிசும் இல்லை..! தனியா துணிவோடு இருக்கும்.. விஜய் அஜித் ரசிகர்கள் போஸ்டர் யுத்தம்

44

அல்லு அர்ஜுனுக்கு நம்மில் பலரைப் போல பிரியாணி சாப்பிட விரும்புகிறார் இருப்பினும் நடிகர் தனது வழியில் வரும் அனைத்து உணவையும் சாப்பிடுவார் ஆனால் அவர் இதயத்தில் பிரியாணி தனி இடம் பிடித்துள்ளது. ஆரோக்கியமான உணவில் ஒரு பகுதி இது நறுமணம் மற்றும் அதிக மசாலா பொருட்களைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இது வெஜ் மற்றும் நான்வேஜிலும் கிடைக்கிறது.

பிரியாணியை விரும்பாத மனிதர்கள் உலகில் இல்லை பிரியாணி தவிர அல்லு அர்ஜுனுக்கு தோசையும் மிகவும் பிடிக்கும் ஏனெனில் அவர் தொற்று நோய்க்கு ஆட்பட்டிருந்தபோது அவரது மகள் அவருக்கு தோசை தான் சுட்டு கொடுத்திருந்தார். மேலும் அல்லு அர்ஜுன் மிகவும் பிட்னஸ் பிரியர் அவரைப் போலவே பிட்டாக இருக்க அவரது வழிமுறைகளை பின்பற்றும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் தனது உணவில் கண்டிப்பாக இருக்கிறார் மற்றும் தினசரி தேவையான உணவை மட்டுமே உட்கொள்கிறார். எனக் கூறியுள்ளார் அல்லு அர்ஜுனனின் மனைவி சினேகா ரெட்டி.

Read more Photos on
click me!

Recommended Stories