வெந்து தணிந்தது காடு சக்சஸ் ஆனதால்... கவுதம் மேனனுக்கு விலையுயர்ந்த பைக்கை பரிசாக கொடுத்த தயாரிப்பாளர்

First Published | Sep 24, 2022, 9:36 AM IST

Gautham Menon : வெந்து தணிந்தது காடு திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்ததனால், அப்படத்தின் இயக்குனர் கவுதம் மேனனுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேசன் பைக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். 

சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்த செப்டம்பர் 15-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரூ.30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி உள்ளது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக கடந்த வாரம் சக்சஸ் பார்ட்டியும் நடத்தப்பட்டது.

அதில் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்பதையும், அதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை கவுதம் மேனனும், ஜெயமோகனும் தொடங்கிவிட்டதாக தயாரிப்பாளர் ஐசரி கணேசன் அந்த விழாவில் கூறி இருந்தார். முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக எடுக்கவும் பான் இந்தியா படமாக வெளியிடவும் உள்ளதாக ஐசரி கணேசன் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்... மீடூ புகார் கொடுத்ததால் விஷம் வச்சு கொல்லப்பாத்தாங்க... விஷால் பட நடிகை பகீர் புகார்

Tap to resize

இந்நிலையில், வெந்து தணிந்தது காடு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ரீதியாக மாபெரும் வெற்றிப்படமாக அமைந்ததால், அப்படத்தின் இயக்குனர் கவுதம் மேனனுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேசன் பைக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். கவுதம் மேனனுக்கு அவர் கொடுத்துள்ள புல்லட் பைக்கின் விலை ரூ.2 லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான கமலின் விக்ரம் திரைப்படம் வெற்றிபெற்றபோது அதன் இயக்குனருக்கு ரூ.80 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக வழங்கி இருந்தார் கமல். அதுமட்டுமின்றி அப்படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்கு பைக்குகளையும் பரிசளித்தார். தற்போது அதே டிரெண்டை தயாரிப்பாளர் ஐசரி கணேசன் பாலோ பண்ணி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... கல்லூரி மாணவிகளுடன் களைகட்டிய துருவ் விக்ரமின் பிறந்தநாள்..! பர்த்டே போட்டோஸ்..!

Latest Videos

click me!