தளபதி விஜய்:
தமிழ் சினிமாவின் அதிக அளவிலான ரசிகர்களை கொண்ட, முன்னணி நடிகர் தான் தளபதி விஜய். அப்பா இயக்கிய சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக தலை காட்டிய விஜய், பின்னர் நாளைய தீர்ப்பு படத்தில் கதாநாயகனாக மாறினார். வெற்றிகரமான ஹீரோவாக சுமார் 33 வருடங்களுக்கு மேல் நடித்து வரும் விஜய் தற்போது 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். தளபதி விஜயின் 69-ஆவது படமாக உருவாகும் இந்த படம் தான் இவரின் கடைசி படம் என்பதை அவரே அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.
200 கோடி சம்பளம்:
200 கோடி சம்பளம் வாங்கும் நடிகர் விஜயின் சொத்து மதிப்பு, சுமார் 400 முதல் 600 கோடி குறிக்கும் என்பது ஏற்கனவே தெரிய வந்திருந்தாலும், தற்போது நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் தான் வெளியாகியுள்ளது.
விஜய் மனைவி சங்கீதா சொர்ணலிங்கம்:
தளபதி விஜய் கடந்த 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். விஜய் மற்றும் சங்கீதாவுக்கு திருமணமாகி 23 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் முக்கிய நிகழ்வுகளில் அவருக்குப் பதிலாக அவரது மனைவி சங்கீதா தான் கலந்து கொண்டு வருகிறார். கட்சி தொடங்குவதற்கு முன் இசை வெளியீட்டு விழாவில் மட்டுமே சங்கீதா கலந்து கொண்டிருந்தார். அதன் பிறகு சங்கீதாவை வெளியில் பார்க்கவே முடியாது.
பிக் பாஸ் முடிந்த கையோடு ஹீரோவான விஜே விஷால் - அதுவும் ரொமாண்டிக் ஹீரோ பாஸ்!
சங்கீதா சொத்து மதிப்பு:
இந்த நிலையில் தான் சங்கீதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது . அதன்படி சங்கீதாவின் சொத்து மதிப்பு ரூ.400 கோடி இருப்பதாக இந்தியா.காம் தெரிவித்துள்ளது. ஆனால், அவர் என்னென்ன வேலைகள் செய்கிறார் என்ற விவரங்கள் ஏதும் இல்லை. அவரது தந்தை லண்டனில் உள்ள கோடீஸ்வரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கார் பிரியர் விஜய்:
கார் பிரியரான விஜய் ஆடி, பிஎம்டபிள்யூ. லெக்சஸ் உள்பட பல ஆடம்பரமான சொகுசு கார்களை வைத்திருக்கிறார். சென்னை நீலாங்கரையில் ஆடம்பரமான சொகுசு வீடு இருக்கும் நிலையில் திருவள்ளூர், திருப்போரூர், திருமழிசை, வண்டலூர் ஆகிய இடங்களில் ஏராளமான சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
அர்ஜுன் பட ஹீரோயின் ஹரிப்ரியாவுக்கு குழந்தை பிறந்தது!
ஜன நாயகன்
குடியரசு தினத்தை முன்னிட்டு தளபதி 69 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட், செகண்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றன. எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், பாபி தியோல், மமிதா பைஜூ, மோனிஷா பிளெஸி ஆகியோர் பலர் நடிக்கின்றனர். கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.