ஹீரோவான பிக் பாஸ் விஜே விஷால்
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந் தேதி தொடங்கி இந்த ஆண்டு ஜனவரி மாதம் 19ந் தேதி வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆனார். அவருக்கு ரூ.40 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் பிக் பாஸ் டிராபி வழங்கப்பட்டது. இதையடுத்து செளந்தர்யாவுக்கு இரண்டாவது இடமும், விஜே விஷாலுக்கு மூன்றாவது இடமும் கிடைத்தது. அதுமட்டுமின்றி அவர் 5 லட்சத்திற்கான பணப்பெட்டியையும் எடுத்ததால் அந்த தொகையையும் வென்றிருந்தார்.
சீரியல் நடிகர் விஜே விஷால்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் அதன்மூலம் தங்களுக்கு கிடைக்கும் புகழ் வெளிச்சத்தை பயன்படுத்தி, சினிமாவில் அடுத்தடுத்த லெவலுக்கு செல்வார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது நம்பிக்கை நாயகர்களாக வலம் வரும் கவின், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் தான். அந்த வரிசையில் விஷாலும் ஹீரோவாகும் முனைப்போடு பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருந்தார்.
இதையும் படியுங்கள்... பார்க்க தான் டம்மி; ஆனா முத்துக்குமரன் வென்ற பிக் பாஸ் டிராபியில் இத்தனை சிறப்பம்சங்களா?
விஜே விஷால் நடித்த ஆல்பம் பாடல்
VJ Vishalஅந்நிகழ்ச்சி முடிந்த கையோடு அவருக்கு ஹீரோ சான்ஸ் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் ஆல்பம் பாடல் ஒன்றில் விஷால் நாயகனாக நடித்திருக்கிறார். அந்த ஆல்பம் பாடலை சனோஜ் இயக்கி உள்ளார். இந்த ஆல்பம் பாடலில் விஷால் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அவந்திகா மிஸ்ரா நடித்திருக்கிறார். இந்த ஆல்பம் பாடலுக்கு விக்னேஷ் மகேந்திரன் இசையமைத்து உள்ளார். இந்தப் பாடலை சூப்பர் சிங்கர் பிரபலம் ஆதித்யா பாடி இருக்கிறார்.
விஷாலை பாராட்டிய ரவீந்தர்
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு விஷால் ஹீரோவாக நடித்துள்ள ஆல்பம் பாடலின் போஸ்டர் ரிலீஸ் ஆகி உள்ளதை பார்த்து மகிழ்ச்சி அடைந்த ரவீந்தர் சந்திரசேகர், அந்த போஸ்டரை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, விஷாலுக்கு வாழ்த்துக்கள், உங்களை பெரிய திரையில் காண ஆவலோடு இருக்கிறேன். நீ எப்பவுமே ஹீரோ தான் டா என பதிவிட்டு தன் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரின் இந்த பதிவுக்கு கீழ் விஷாலை பாராட்டி சிலர் பதிவிட்டாலும், ஏராளாமானோர் திட்டி பதிவிட்டு வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் தக்க பதிலடி கொடுத்து வருகிறார் ரவீந்தர்.
இதையும் படியுங்கள்... பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா உடன் கல்யாணம் எப்போ? அருண் சொன்ன குட் நியூஸ்