மனைவி சங்கீதாவுடன் வாரிசு படம் பார்த்த விஜய்! தாமதம் ஆனதால் பட குழுவினர் மீது கோவப்பட்டாரா தளபதி!

Published : Jan 10, 2023, 06:40 PM IST

'வாரிசு' படத்தை தளபதி விஜய், அவருடைய மனைவி சங்கீதாவுடன் இணைந்து சிறப்பு காட்சியை கண்டுகளித்த போது படக்குழுவினரிடம் கோபம் கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

PREV
16
மனைவி சங்கீதாவுடன் வாரிசு படம் பார்த்த விஜய்! தாமதம் ஆனதால் பட குழுவினர் மீது கோவப்பட்டாரா தளபதி!

தளபதி விஜய் அவருடைய மனைவி சங்கீதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து முடிவை கையில் எடுத்துள்ளதாக... கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே வததிகள் பரவியது. விஜய் தனக்கு நெருக்கமானவர்களின் விசேஷங்கள் மற்றும் படவிழாவிற்கு மனைவி சங்கீதாவுடன் வருவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், பிரியா அட்லி வளைகாப்பு நிகழ்ச்சி மற்றும் வாரிசு பட விழாவில் தனியாக கலந்து கொண்டதால் இந்த வதந்தி பரவியது.

26

மேலும் இதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக விஜய் தரப்பில் இருந்து கூறப்பட்டதாவது, விஜயின் மனைவி சங்கீதா வெகேஷனுக்காக தன்னுடைய மகள் மற்றும் மகனுடன் அமெரிக்காவில் உள்ளதால் தான் அவர் படவிழா மற்றும் பிரியா அட்லீயின் விசேஷங்களில் கலந்து கலந்து கொள்ளவில்லை என கூறப்பட்டது.

விபத்தில் சிக்கிய 'இனியா' சீரியல் நடிகை ஆல்யா மானசா! கால் எலும்பு முறிந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி..!
 

36

இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியுள்ள விஜய்யின் மனைவி சங்கீதா, நேற்று தளபதி விஜய் உடன் சேர்ந்து 'வாரிசு' படத்தின் சிறப்பு காட்சியை பார்த்ததாக கூறப்படுகிறது.
 

46

மயிலாப்பூரில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தின் திரையரங்கில் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இருவரும் 'வாரிசு' படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க படக்குழு ஏற்பட்டுருந்தனர். விஜய் படக்குழுவினர் சொன்ன நேரத்திற்கு மனைவியுடன் வந்த போதிலும், ஒரு சில காரணங்களால்... படம் திரையிட இரண்டு மணிநேரம் தாமதமாகியுள்ளது.

ஒத்த செருப்புக்காக ஆஸ்கரில் 20 லட்சத்தை இழந்தேன்.! ஆனால் இரவின் நிழல்? - ஆஸ்கர் அரசியலை பேசிய பார்த்திபன்!
 

56

இதனால் தளபதி விஜய் சற்று கோவமாக நடந்து கொண்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு மணிநேரம் தாமதமாக படம் போடப்பட்ட பின்னர், விஜய் மனைவியுடன் படம் பார்த்து விட்டு இரவு 8:30 மணி போல், அங்கிருந்து சென்றுள்ளார். 
 

66

மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தை, இயக்குனர் வம்சி இயக்கி உள்ளார். தில் ராஜு தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில், பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், குஷ்பூ, சங்கீதா, யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் திசை அமைத்துள்ளார். மிக பிரமாண்டமாக உருவாக்கி உள்ள இப்படம் நாளை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பரிந்துரை பட்டியலை வெளியிட்ட ஆஸ்கர் குழு... இரவின் நிழல், காந்தாரா உள்பட 10 இந்திய படங்கள் தகுதி

Read more Photos on
click me!

Recommended Stories